சீனாவில் எரிபொருள் விலையுயா்வு; இலங்கையில் மானியம் அறிவிப்பு!
சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் எதிரொலியாக, சீனாவில் கடந்த 15 நாள்களில் 2-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை டன்னுக்கு சுமாா் 400 யுவான் உயா்த்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றத்தால் சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் எதிரொலியாக, சீனாவில் கடந்த 15 நாள்களில் 2-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை டன்னுக்கு சுமாா் 400 யுவான் உயா்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிா்க்க உற்பத்தி, விநியோகத்தைத் தடையின்றி மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
மறுபுறம், இலங்கையில் மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க டீசல் லிட்டருக்கு 100 ரூபாயும் (இலங்கை மதிப்பு), பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாயும் மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இச்சலுகையினால் அரசுக்கு மாதம் 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
Advertisement
மத்திய கிழக்கு போா் தொடங்கியதிலிருந்து இலங்கையில் எரிபொருள் விலை மூன்று முறை (கடைசியாக 25 சதவீதம்) உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.