முகப்பு
சிறுவர்மணி

திருக்குறளின் சிறப்புகள்...

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் 42,194 ஆகும். தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 37 தமிழ் எழுத்துகள் இடம்பெறவில்லை. தமிழ், கடவுள் ஆகிய இரு சொற்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை.

Updated On : 24 நவம்பர், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 23 நவம்பர், 2024 at 11:25 PM

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் 42,194 ஆகும். தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 37 தமிழ் எழுத்துகள் இடம்பெறவில்லை. தமிழ், கடவுள் ஆகிய இரு சொற்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை. திருக்குறள் உரையாசிரியர்களில் பத்தாவது உரையாசிரியர் பரிமேலழர். 'கோடி' என்ற சொல் 7 இடங்களில் இடம்பெற்றுள்ளன. 'எழுபது கோடி' என்ற சொல் ஒரேயொரு குறளில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 'ஏழு' என்ற சொல் 8 குறள்களில் எழுதப்பட்டுள்ளது. இடம்பெறாத எண்- 9.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

திருக்குறள் முதன்முதலில் 1812-இல் அச்சிடப்பட்டது. முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசம். முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

Advertisement

'ஒள' என்ற உயிர்எழுத்து பயன்படுத்தப்படவில்லை. 'னி' என்ற எழுத்து 1,705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ங', 'ளீ' என்ற எழுத்துகள் ஒரேமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. 'நெருஞ்சி' என்ற பழம் ஒருமுறையும், 'குன்றிமணி' என்ற விதை ஒருமுறையும் இடம்பெற்றுள்ளன. அனிச்சம், குவளை மலர்களும், பனை, மூங்கில் மரங்களும், இடம்பெற்றுள்ளன.

-முக்கிமலை நஞ்சன்

Updated On : 23 நவம்பர், 2024 at 11:27 PM

திருக்குறளில் கடவுள் என்ற சொல் இடம்பெறாமல், தெய்வம் என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது. '

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.