FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

அசத்தல்...

இங்கிலாந்தின் லிவர்பூலில் அண்மையில் நடைபெற்ற பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களில் 20 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள்.

Updated On : 24 ஆகஸ்ட் 2025, 12:04 am IST
பகிர்:

இங்கிலாந்தின் லிவர்பூலில் அண்மையில் நடைபெற்ற பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களில் 20 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள்.

எட்டு வயதுக்கு உட்பட்டவர்கள், பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் போன்ற ஐந்து வயதுப் பிரிவுகளில் (கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று பிரிவுகளில்) வழங்கப்பட்ட 78 பரிசுகளில், சுமார் மூன்றில் ஒரு பங்கு பரிசுகளை இந்திய வம்சாவளி குழந்தைகள் தட்டிச் சென்றுள்ளனர்.

ஹாரோவைச் சேர்ந்த பத்தரை வயது சிறுமி போதனா சிவானந்தன், 2025 பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பில் கிராண்ட் மாஸ்ட்டர் பீட்டர் வெல்ஸை வீழ்த்தி "மிகக் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த சிறுமி' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் 60 வயதான பீட்டர் வெல்ஸை போதனா தோற்கடித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments