மேன்மை அடைய...
உண்மை பேசி நாளுமே உயர்வை அடைய வேண்டுமே
உண்மை பேசி நாளுமே
உயர்வை அடைய வேண்டுமே
நன்மை செய்து வாழவும்
நாளும் ஊரே வாழ்த்துமே!
-
தேடிச் சென்று பேசவும்
தென்றல் காற்று சுகமாமே
வென்று காட்ட முடிந்தாலே
அன்பின் ஆழம் புரியுமே!
-
வன்மை ஒழிய பேசிட
இனிமை நாளும் சூழுமே
மென்மை உணர்வு என்றுமே
மேன்மை புகழும் அடையுமே!
ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்