லட்டு லட்டு பூந்தி லட்டு
லாலாகடை தட்டில் தகதக லட்டு
பிட்டு சாப்பிட இனிக்கும் லட்டு
பிரியமாய்த் தின்னும் பெரிய லட்டு
பசு நெய்யில் பதமாய் செய்த லட்டு
பாதாம் முந்திரி பருப்பு சேர்த்த
வசீகர வட்ட வடிவ லட்டு
ருசியாய் சுவைக்கும் கிஸ்மிஸ் லட்டு
மஞ்சள் வண்ண மயக்கும் லட்டு
மனதைக் கவரும் மாம்பழ லட்டு
கொஞ்சி விளையாடும் பிஞ்சு குழந்தைகள்
கொக்கரித்து கொத்தி தின்னும் லட்டு!
மு.அ.அபுல் அமீன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.