உலகிலேயே மிகச் சிறிய நாடான வாடிகனின் மொத்தப் பரப்பளவு 106.7 ஏக்கர்.
உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் காணப்படும் தமிழ்ச் சொல்- "நல்வரவு'.
தாவரங்கள் மரபணுக்கள் மூலம் சிறந்த புதுத்தாவரத்தை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் இந்திய அறிவியலாளர் கமலா காந்த் பாண்டே.
நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள கோதுமை விதையை உருவாக்கிய இந்தியர் பெஞ்சமின் பியரிபால்.
புகைவண்டிப் பாதையை உருவாக்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் புரிவித்திக்.
திகார் சிறையில்தான் முதல்முதலில் அகதிகளுக்கு வங்கிக் கிளை தொடங்கப்பட்டது.
மடிப்பு விசிறியை உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஒரு தேக்கரண்டி என்பது 4 மில்லி.
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
ஒரு ஜாமம் என்பது மூன்று மணி நேரம்.
ஒரு ஆழாக்கு என்பது 168 மில்லி.
ஒரு வீசை என்பது 1.4 கிலோ.
ஒரு கஜம் என்பது மூன்று அடிகள்.
ஒரு புல்லாங்குழலில் எட்டு துவாரங்கள் உள்ளன.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
மனிதத் தலையில் 83 தசைகள் உள்ளன.
கழுகின் ஆயுள்காலம் 72 ஆண்டுகள்.
தாயின் வயிற்றுள் கரு உண்டானவுடன் பதினெட்டாம் நாளில் இதயம் பட்டாணி அளவில் இருக்கும். அப்போதே இதயம் துடிக்கத் தொடங்கிவிடுகிறது. அப்போது, இதயத் துடிப்பு விநாடிக்கு ஒரு தடவையாக இருக்கிறது.
யானையின் பாத அளவை வைத்து, அதன் உயரத்தைக் கணக்கிடுகின்றனர். காதின் பின்புறத்தை வைத்து, அதன் வயதைக் கணக்கிடுகின்றனர்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
வேர் இல்லாத தாவரம்- காளான்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.