சிறுவர்மணி

70 ஆயிரம் கி.மீ. பயணம்!

'ஆர்க்டிக்டெர்ன்' என்ற நூறு கிராம் எடையுடைய பறவை, இந்தப் பறவை ஆர்க்டிக், அண்டார்டிக் இடையே ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கி.மீ. பயணித்து, உலகின் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.

ஆர். ஆர்.

'ஆர்க்டிக்டெர்ன்' என்ற நூறு கிராம் எடையுடைய பறவை, இந்தப் பறவை ஆர்க்டிக், அண்டார்டிக் இடையே ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கி.மீ. பயணித்து, உலகின் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.

'பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே', 'நேஷனல் ஜியாகிராபிக் சொசைட்டி' ஆகியன நடத்திய ஆராய்ச்சியின்படி, 'ஆர்க்டிக்டெர்ன்கள் மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிகம் பறக்கின்றன.

இது கோடையின்போது ஆர்க்டிக்கில் கூடு கட்டி பின்னர் மீண்டும் சூரிய ஒளியை அனுபவிக்க, தெற்கு அண்டார்டிகாவுக்குச் செல்கிறது. தெற்கில் கோடைகாலம் முடிந்ததும் மீண்டும் வடக்கு நோக்கி பூமியை ஒரு முழு சுற்று பயணிக்கிறது. 30 ஆண்டு ஆயுளில் ஒரு ஆர்க்டிக்டெர்ன் மட்டும் 2.4 மில்லியன் கி.மீ. தொலைவு பயணிக்கிறது. வேறு விதமாக கூற வேண்டுமானால் இது பூமியிலிருந்து மூன்று முறை சந்திரனுக்குச் செல்வதற்கு சமம். காற்றின் பாதையில் வளைந்து பயணிக்கின்றன.

அதிக முயற்சி இல்லாமல் நீண்ட தூரம் பறக்கின்றன. இந்தப் பறவைக்கு அதன் நீண்ட, குறுகிய இறக்கைகள் மிக உதவியாய் உள்ளன. பயணத்தின்போதே கடலின் மேற்பரப்பில் உள்ள மீன்கள் போன்றவற்றைப் பிடித்துச் சாப்பிடுகின்றன. ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்துக்குப் பயணிப்பதால் ஆண்டுதோறும் இரு கோடை காலங்களை அது அனுபவிக்கிறது.அதன் இருப்பு முழுவதும் நிலையான பகல் நேரத்திலேயே கழிகிறது.' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT