சிறுவர்மணி

தெரியுமா?

பணக்கார நாடு: சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே ஒரு சிறிய புள்ளிதான் 'லிச்டேன்ஸ்டீன்'.

ராஜிராதா

பணக்கார நாடு: சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே ஒரு சிறிய புள்ளிதான் 'லிச்டேன்ஸ்டீன்'. இவ்விரு நாடுகளின் விமான நிலையங்களேயே போக்குவரத்துக்கு பயன்படுத்துகிறது. உலகின் ஆறாவது குட்டி நாடு. சுவிட்சர்லாந்தின் பிராங்கை தன் நாணயமாக கொண்டது.

ராணுவம் நூறு பேர் மட்டுமே. பெரிய அளவில் சண்டை என வந்தால் சுவிட்சர்லாந்து பார்த்துக் கொள்ளும். கடன் இல்லாத நாடு. குற்றமும் குறைவு.

இந்த நாட்டின் மொத்த ஜனத்தொகை சுமார் நான்கு லட்சம். ஐரோப்பா நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த கடைசி நாடு இதுதான்.

தேவையில்லாத செலவினங்களைத் தவிர்த்து மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தையும் இந்தப் பணக்கார ஐரோப்பிய நாடு வழங்கியுள்ளது. இந்த நாட்டில் மக்கள் தொகையைவிட பதிவு செய்யப்பட்ட தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகம்.

பல் செட்டுக்குப் பயன்படும் சிறிய கருவியில் இருந்து வான்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான கருவிகள் வரை தயார் செய்கிறது. இங்கு இளவரசரே நாட்டை ஆள்கிறார். பிரிட்டன் அரசரைவிட இவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு அதிகம்.

மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு:

உலகிலேயே மூன்று தலைநகரங்களைக் கொண்டது தென் ஆப்பிரிக்கா. பிரிட்டோரியா நிர்வாக தலைநகரமாக இருக்கிறது. கேப் டவுனில் சட்ட மன்றமும், ப்ளுபோன்டைனில் நீதித்துறையும் செயல்படுகிறது.

12 அதிகாரபூர்வ மொழிகள், பல கலாசாரங்கள், பிராந்திய அடையாளங்களைக் கொண்டது தென் ஆப்பிரிக்கா. ஒற்றுமையையும், நியாயத்தையும் பராமரிக்கும் வேலையில் பிராந்தியங்களுக்கு இணையான அதிகாரத்தை பிரிப்பதும்தான் இதற்கு காரணம். 1910-இல் தென் ஆப்பிரிக்கா ஒன்றியம் உருவாக்கப்பட்டது முதல் இவ்வாறு இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT