என்றும் உண்மை பேசுவேன்
எழுச்சி கொண்டு வாழுவேன்
உயர்வை எண்ணி ஓடுவேன்
உரத்தச் சிந்தனை நாடுவேன்!
-
நன்மை செய்ய ஓடுவேன்
நல்ல வழி தேடுவேன்
வென்று காட்ட எண்ணுவேன்
வாய்மை வழியில் செல்லுவேன்!
-
தென்றல் போல பேசுவேன்
தேடி நட்பு கூடுவேன்
அன்பின் ஆழம் காணுவேன்
அனைத்து அறமும் பேணுவேன்!
வசீகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.