முகப்பு
சிறுவர்மணி

திரைத்துறையில் சாதிப்பதே லட்சியம்!

இசையைப் பயின்று, திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என்பதே லட்சியம்!' என்கிறார் கைமல்யுத்தப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவி பி.ஆயிஷா இமயா.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:42 PM

தாம்பரம் மனோபாரதி

'இசையைப் பயின்று, திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என்பதே லட்சியம்!'' என்கிறார் கைமல்யுத்தப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவி பி.ஆயிஷா இமயா.

தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், தமிழக ஆர்ம் ரெஸ்லிங் அமைப்பும் இணைந்து நடத்திய 'ஆர்ம் ரெஸ்ஸிங்' எனும் கைமல்யுத்தப் போட்டியில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த பி.ஆயிஷா இமயா பங்கேற்று, தங்கம், வெள்ளி என இரு பதங்கங்களை வென்றார்.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:42 PM

தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயிலும் இவர் கூறியது:

'சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றும் எனது தந்தை ஏ.எஸ். பிலால் அளித்த ஊக்கமே விளையாட்டிலும், இசையிலும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. கைமல்யுத்தம் போட்டியில் பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளேன்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் நடத்திய போட்டியில் பரிசு பெற்றதற்காக உலக ரெப்ரி எஸ்.கெவின், தமிழக ஆர்ம் ரெஸ்லிங் அசோஷியேசன் தலைவர் எஸ்.சுரேஷ்

குமார் உள்ளிட்டோர் என்னைப் பாராட்டினர்.

பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றிய பாட்டுப் போட்டியில் முதல் பரிசை வென்றேன். மேலும், கோகோ போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன். பிளஸ் 2 முடித்துவிட்டு, இசைக் கல்லூரியில் பயில்வேன். திரைத்துறையில் இயக்குநராகவும், நடனத்திலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்!'' என்கிறார் பி.ஆயிஷா இமயா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.