உபாதையில்லா உருளைக்கிழங்கு!
* உருளைக்கிழங்கு என்ற வார்த்தையைக் கேட்டாலே, நம்மில் பலரும் அலறுவதைக் காண்கிறோம். ஆனால் உடலுக்கு மிகுதியான உறுதியைத் தரவல்லதுதான் உருளைக்கிழங்கு என்பதே உண்மை. 2008 சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு என அனுச
* உருளைக்கிழங்கு என்ற வார்த்தையைக் கேட்டாலே, நம்மில் பலரும் அலறுவதைக் காண்கிறோம். ஆனால் உடலுக்கு மிகுதியான உறுதியைத் தரவல்லதுதான் உருளைக்கிழங்கு என்பதே உண்மை. 2008 சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு என அனுசரிக்கப்பட்டது.
* இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் இந்திய மருத்துவ சங்கமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
* உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொள்வதால், உடல் எடை அதிகரிக்கும். நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் கட்டுக்கதை.
* மாறாக, உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் உருளைக்கிழங்கில் குறைந்த அளவிலான கலோரியே உள்ளது. அதேபோல் இயற்கையிலேயே கொழுப்பு குறைவான, உயிர்ச்சத்துக்கள் மிகுதியான உணவாகும் என்கிறது இந்திய மருத்துவ சங்கம். எனவே எவ்வித அச்சமுமின்றி உருளைக்கிழங்கை உண்ணலாமே!