முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சமையல்: பூரணம் பாகற்காய்

தேவையானவை: பாகற்காய் -8, வெங்காயம் -4, காய்ந்த மிளகாய் -4, புளித்த மோர் -ஒரு கப், எண்ணெய் -ஒன்றரை தேக்கரண்டி, இஞ்சி, பூண்டு விழுது -ஒரு மேசைக்கரண்டி, உப்பு -தேவைக்கேற்ப செய்முறை: பாகற்காயை நன்கு கழுவி

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:05 PM
பகிர்:

தேவையானவை: பாகற்காய் -8, வெங்காயம் -4, காய்ந்த மிளகாய் -4, புளித்த மோர் -ஒரு கப், எண்ணெய் -ஒன்றரை தேக்கரண்டி,

இஞ்சி, பூண்டு விழுது -ஒரு மேசைக்கரண்டி, உப்பு -தேவைக்கேற்ப

செய்முறை: பாகற்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கழுவிய பாகற்காயைக் குறுக்காக நறுக்கி, இரண்டு பாகங்களாகப் பிரித்து அதனை நீளவாக்கில் ஒரு கீறல் போட்டுக் கொள்ளவும். பின்னர் உள்ளே உள்ள விதைகளையும் சோற்றினையும் நீக்கிவிடவும். ஒரு பக்கத்தை மட்டும்தான் வெட்ட வேண்டும். இரண்டு துண்டுகளாகப் பிரித்துவிடக் கூடாது.

  ஒரு பாத்திரத்தில் புளித்த மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் பாகற்காயைப் போட்டு வேக விடவும்.

  வெங்காயம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.

  பாகற்காய் வெந்ததும் அதனை எடுத்து மோர் வடியும்படி இறுத்துக் கொள்ளவும்.

  பின்னர் கலந்து வைத்துள்ள வெங்காயக் கலவையைப் பாகற்காயினுள் வைத்து, வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுக்கவும்.

  மெதுவாக எல்லாப் பக்கமும் திருப்பி விடவும். வேகமாக செய்தால் பாகற்காயின் உள்ளே உள்ள பூரணம் வெளியே வந்துவிடும். கசப்பு சுவைக்காகப் பாகற்காயை விரும்பாதவர்கள்கூட இந்தப் பூரணம் பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 

காராமணி பொறியல்

தேவையானவை: காராமணி -1 டம்ளர், வெங்காயம் -2, காய்ந்த மிளகாய் -3, தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், கறிவேப்பிலை -10 இலை

செய்முறை: காராமணியை முன்தினம் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும். காலையில் காராமணியை நன்கு கழுவிவிட்டு, குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மூன்று விசில் வைத்து இறக்கிக் கொள்ளவும். காராமணி வெந்ததும் அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், மிளகாயையும் மிக்ஸியில் போட்டு லேசாகத் திரிதிரியாக அரைத்துக் கொள்ளவும்.

  வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை அரைத்த வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் அதில் காராமணியையும் போட்டு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். உடலுக்கு மிகவும் நல்லது. இந்தப் பொறியல் கேரளாவில் மிகப் பிரபலம். அவர்கள் தேங்காய் எண்ணெய் விட்டு காராமணி பொறியலை செய்வதால் ருசி அதிகமாக இருக்கும்.

 

முழு கட்டுரையைப் படிக்க →