முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கானமும் தானமும்

சா.கந்தசாமியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற "விசாரணை கமிஷன்' நாவல், வசந்த் இயக்க, ஒருமணி நேர சின்னத்திரைப் படமாகத் தயாராகியிருக்கிறது.   வசனங்கள் இயற்கையாகவும், பாத்திரங்களின் தன்மையை ஒட்டியும் இருக்

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:41 PM
பகிர்:

சா.கந்தசாமியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற "விசாரணை கமிஷன்' நாவல், வசந்த் இயக்க, ஒருமணி நேர சின்னத்திரைப் படமாகத் தயாராகியிருக்கிறது.

  வசனங்கள் இயற்கையாகவும், பாத்திரங்களின் தன்மையை ஒட்டியும் இருக்கின்றன என்பது திருப்தி தருகிற அம்சம். அதேபோலத்தான் நடிப்பும். இத்தனைக்கும் நடிகர்கள் பெரிய திரையிலோ, சின்னத் திரையிலோ நிறைய நடித்து அனுபவம் பெற்றவர்கள் அல்ல. ஆனால் தேனி முருகன் பஸ் கண்டக்டராகவும், லட்சுமி பள்ளிக்கூட ஆசிரியையாகவும் கிட்டத்தட்ட அந்தப் பாத்திரங்களாக வசந்த்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறார்கள்.

  வசந்த் ஏற்கெனவே சா.கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதையைத் திரை வடிவத்துக்குக் கொண்டு சென்றிருப்பதால், கந்தசாமியின் "மொழி' வசந்த்துக்குப் பழக்கமானது எனலாம்.

  திரையிடலுக்குப் பிறகு அசோகமித்திரன் குறிப்பிட்ட மாதிரி, கண்டக்டர் பாத்திரம் பண்படுத்தப்படாத ஒரு மனிதனின் இயற்கையான வெளிப்பாடுகளைப் பதிவு செய்கையில், டீச்சர் பாத்திரமும், அதற்கு நேரெதிரான பண்படுத்தப்பட்ட குணசித்திரமாக நாவலில் எப்படி அமைந்திருந்ததோ அப்படியே லட்சுமி நடிப்பில் வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களுக்கு இடையேயான நெருக்கமும் இடைவெளியும் கூட இயற்கையாக இருக்கின்றன. சோகம் கூட மிகைப்படுத்தப்படாத சோகம்.

  இறுதியில் கண்டக்டர் தாக்கப்பட்டு, போலீஸின் மிருகத்தனமான ஆவேசம். அவர் உயிரையே பறிக்கும்போது, தலைப்பு நியாயப்படுத்தப்படுகிறது.

  ஒரு படைப்பாளியின் நாவலைப் படமாக்கும்போது சில சங்கடங்கள் உண்டாகலாம். சர்ச்சைகள் உண்டாகலாம். அவை எழாமல் தவிர்ப்பது இயக்குநர் என்ற படைப்பாளியின் கையில் இருக்கிறது. வசந்த் நிறையப் படிக்கிற பழக்கமுள்ள இயக்குநராக இருப்பதால், சா.கந்தசாமியின் படைப்புக்குப் பங்கம் ஏதும் உண்டாகவில்லை எனத் தோன்றுகிறது. இல்லையென்றால் மேடையிலேயே ""படம் எனக்குத் திருப்தி அளிக்கிறது'' என்று சா.கந்தசாமி கூறமாட்டார்.

வாசுதேவ மேனன் எடின்பர்க்கில் அறிவியல்துறையில் பணியாற்றும் இளைஞர். பெற்றோர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள். ( பாட்டி டி.ஏ.ஜெயலக்ஷ்மி டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகங்களில் நடித்திருக்கிறார் என்கிறார் வாசுதேவ் ) இவரைச் சந்தித்தது "ஆஷாட மாதத்தில் ஒருநாள்' என்ற ஆங்கில நாடக மேடையில்.

  கெüரி ராம்நாராயண் இயக்கத்தில் புகழ்பெற்ற நாடகாசிரியர் மோகன் ராக்கேஷின் "ஆஷாட் கா ஏக் தின்' நாடகத்தை ஆங்கிலத்தில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கில மொழியாக்கம், ராம் நாராயண். மொழியின் ஆளுமையும், வீச்சும் சக்தி வாய்ந்த வசனங்களில் பளிச் சென்று தெரிந்தன. குறிப்பாக மல்லிகாவும் அம்பிகாவும் பேசுகின்ற கட்டங்களில்.

  கதை, காளிதாசனின் கதை. அவனுக்கு மல்லிகா என்ற காதலி இருப்பதாக ஒரு கற்பனைப் பாத்திரம். அனிதா ரத்னம், பி.சி.ராமகிருஷ்ணா, வி.பாலகிருஷ்ணன், வாசுதேவ் மேனன், அகிலா ராம்நாராயண் என்று அற்புதமான மேடை நடிகர்கள். பாலகிருஷ்ணன் காளிதாசனாகவும், அகிலா மல்லிகாவாகவும், அனிதா ரத்னம் அம்பிகாவாகவும், ராமகிருஷ்ணன் மாதுர் ஆகவும் வெகு இயற்கையாக நடித்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

  இந்தி நாடக ஆசிரியர் மோகன் ராக்கேஷுடைய படைப்பில் இசைக்கும் நடனத்துக்கும் இடம் இருக்கவில்லை. ஆனால் கெüரிநாராயண் கற்பனை வளம் மிகுந்த இயக்குனர். இசையிலும் நடனத்திலும் ஆர்வம் உள்ளவர். காளிதாசனின் காவிய வரிகளையே இசையிலும் நடனத்திலும் வழங்கியிருக்கிறார். அம்ருதா முரளியும், ஸ்வர்ண ரேதஸýம் பாட, ஷீஜித் கிருஷ்ணாவும், அஞ்சனா ஆனந்தும் நடனமாட, மேக தூதத்தையும் "குமார சம்பவத்தையும்' கதைப் பாத்திரங்களோடு ஊடும் பாவுமாக இழைத்திருக்கிறார், கெüரி.

  பொதுவாகவே கெüரி ராம் நாராயணின் மேடை நாடகங்களில் இசையும் நடனமும் முக்கிய இடம் பெறுவதுண்டு. இதில் அகிலா ராம்நாராயண் சில பாடல்களை இசைக்கும்போது, இத்தனை இனிமையான குரல் இருந்தும் ஏன் இவர் இசையின் பக்கம் தீவிர கவனம் செலுத்தவில்லை என்று கேட்கத் தோன்றியது.

  கவி காளிதாசனை வித்தியாசமான கோணத்தில் இந்த மேடை நாடகத்தில் பார்க்க முடிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →