"காணி நிலம் போதும்!'
எத்தொழிலாக இருந்தாலும்-தன்னம்பிக்கையோடு ஈடுபட்டு-அதில் வெற்றி காணும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. இதை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பலர் நிரூபித்து வருகின்றனர். இதோ அவர்களின் திறமைக்கு இன் னொரு
எத்தொழிலாக இருந்தாலும்-தன்னம்பிக்கையோடு ஈடுபட்டு-அதில் வெற்றி காணும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. இதை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பலர் நிரூபித்து வருகின்றனர்.
இதோ அவர்களின் திறமைக்கு இன் னொரு சான்று... சிறுக, சிறுக சேமித்து, விளை நிலத்தை விலைக்கு வாங்கி, விவசாயம் பார்த்து வருகின்றனர் என்ற செய்திதான் அது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது ஆர்.கொல்லப்பள்ளி கிராமம். இங்கு, "ஜோதி பெண்கள் மேம்பாட்டு கல்வி சங்கம்' எனும் பெயரில் இயங்கும் மகளிர் சுய உதவிக்குழு
Advertisement
வினர்தான் இச் சாதனைக்குச் சொந்தக்காரர்கள். இதன் தலைவர் ஏ.மலர்க்கொடி தலைமையில் உள்ள 19 பேரில், இருவர் மட்டுமே 35 வயது பெண்கள், மற்ற அனைவரும் 45 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இனி அவர்களின் குரலில்...
"முதல் 8 ஆண்டுகள் தென்னை ஓலை பின்னும் தொழில் செய்தோம். இதில் சேமித்த தொகையின் துணையோடும், வெளியில் கடன் வாங்கியும் 2007ம் ஆண்டு 1.79 ஏக்கர் நிலம் வாங் கினோம். தாட்கோ கடனுதவி பெற்று அரை ஏக்கர் நிலம் வாங்கினோம். தெரிந்த தொழிலைத்தான் செய்கிறோம். இதில் தோல்வியடைய மாட்டோம் எனும்
தன்னம்பிக்கையைத் துணையாகக் கொண்டு, மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யத் தொடங்
கினோம். தொடக்கத்தில் விலைக்கு தண்ணீர் வாங்கி, கடலை பயிரிட்டோம். 3 மாதத்தில் ரூ.20 ஆயிரம் வருவாய் கிடைத்தது. இதை முதலீடாகக் கொண்டு, இரு முறை கடலை, ஒரு முறை மக்காச்சோளம் பயிரிட்டோம்.
அனைத்து விவசாயப் பணிகளையும் 19 பேர் ஒன்று சேர்ந்து பார்க்கிறோம். கூலிக்கு ஆட்கள் வைப்பதில்லை.
39 தென்னை மரங்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் ஓலையை குழுவினரே காசு கொடுத்து வாங்கி, அதை பின்னி விற்பனை செய்கிறோம். அதிலிருந்தும் வருவாய் கிடைக்கிறது.
கட்டுப்பாட்டோடு குழுவை நடத்துகிறோம். குழுக் கூட்டத்துக்குத் தாமதமாக வந்தால் ரூ.5 அபராதம். கூட்டத்துக்கு வராவிட்டாலும் ரூ.5 அபராதம் செலுத்த வேண்டும். விளை நிலத்துக்குப் பணிக்கு வராவிட்டால் அன்றைய கூலி ரூ.50-ஐ உறுப்பினர் செலுத்த வேண்டும்.
இதனால் உறுப்பினர் வருகை, பணிகள் என அனைத்தும் முறையாக நடக்கின்றன.
இதிலிருந்து கிடைக்கும் வருவாயில், சேமிப்புக்கு என ஒதுக்கிவிட்டு மற்றவற்றைப் பிரித்துக் கொள்கிறோம். இதன் மூலம் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து, அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்று கின்றனர். பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துள்ளோம்' என்றபடி மீண்டும் நிலத்தில் வேலை பார்க்கக் கிளம்பினர்.
படங்கள்: எல்.அனந்தராமன்