மதுரையை எரித்த திலகா வருகிறாள்!
பெங்களூரில் டப்பிங் முடித்து கொண்டு காரில் ஏறியவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். பெங்களூரில் இருந்து சென்னைக்குக் காரில் பயணித்தபடியே நமது கேள்விகளுக்குப் பதிலளித்தார் "அண்ணி' மாளவிகா. கன்னடம்,தமிழ்
பெங்களூரில் டப்பிங் முடித்து கொண்டு காரில் ஏறியவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். பெங்களூரில் இருந்து சென்னைக்குக் காரில் பயணித்தபடியே நமது கேள்விகளுக்குப் பதிலளித்தார் "அண்ணி' மாளவிகா. கன்னடம்,தமிழ் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் அவரிடம் எடுத்த பெங்களூர் டு சென்னை பேட்டி இது.
சூட்டிங்கிற்காக பெங்களூரில் இருந்து அடிக்கடி சென்னை வந்து போவது கஷ்டமாக இல்லையா?
என் குழந்தைக்கு ஒன்றரை வயது தான் ஆகிறது. அவனை விட்டுவிட்டு வருவது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஒரு தாயாக அவனுடைய வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை என்பதில் தான் கொஞ்சம் வருத்தம்.
உங்களுடைய நடிப்பிற்கு தேவையான காஸ்டீயூம் எல்லாம் நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்களா?
இல்லை. எல்லாம் ராதிகா தான். டிரஸ் கலர், ஜுவல்ஸ் என எல்லாமே அவர்தான் தேர்வு செய்கிறார்.
உங்கள் கணவர் உங்களுக்கு சப்போர்டீவ்வா இருப்பாரா?
அவருடைய சப்போர்ட் இருப்பதினால் தான் என்னால் நடிக்க முடிகிறது. இல்லை என்றால் வீட்டில் தான் இருந்திருப்பேன். பொதுவாகவே வேலைக்கு செல்லும் பெண்கள் என்று பார்த்தால் அது எந்த வேலையாக இருந்தாலும் அவர்களுடைய கணவரின் சப்போர்ட் இல்லை என்றால் அவர்களால் எதுவும் செய்ய முடியாதில்லையா? எனக்கு அது போல் பிரச்னை எப்பவுமே கிடையாது. அவருடைய சப்போர்ட் நிறையவே இருக்கிறது.
உங்களை டிவியில் பார்க்கும் போழுது உங்கள் வீட்டில் உள்ளவர்கள், உங்கள் உறவினர்கள் கமெண்ட் என்ன?
எங்கள் வீட்டில் இருப்பவர்கள் பெருமையாக நினைப்பார்கள். உறவினர்களும் அப்படி தான். ஆனால் அதிலும் ஒரு சிலர் பொறாமையும்படுவார்கள். அரசி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது சில சமயங்களில் திட்டவும் செய்வார்கள். ஒருமுறை சென்னையில் ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸýக்குப் போயிருந்தபோது ஒரு ரசிகை அடித்த கமெண்ட்: அதோ பாருடி மதுரையை எரித்த திலகா வர்றா...
சின்னத்திரையில் கிடைக்கின்றஅளவிற்கு உங்களுக்கு பெரிய திரையில் வாய்ப்புகள் வருவதில்லையே ஏன்?
வாய்ப்புகள் வராமல் இல்லை. நிறைய வருகிறது நான்தான் நடிப்பது இல்லை. நேரம் இல்லாததுதான் காரணம்.
கன்னடம் தமிழ் என்று மாறி, மாறி நடிக்கிறீர்களே அந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டில் நான் அவ்வளவாக இருப்பது இல்லை. ஷூட்டிங்குக்காக மட்டும்தான் வருகிறேன். மற்ற நேரங்களில் பெங்களூரில்தான் இருக்கிறேன். கன்னடம், தமிழ் இரண்டுமே நன்றாகப் பேசுவேன் என்பதால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.
செல்லமே தொடரில் நீங்கள் என்னவாக நடிக்கிறீர்கள்?
செல்லமே ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் நடக்கின்ற கதை. நல்லவர்கள், கேட்டவர்கள் என்று எதுவுமே கிடையாது. கதைக்கு ஏற்றாற் போல் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் வருகிறோம். எல்லாரும் எல்லா நேரத்திலும் நல்லவர்களாவோ, இல்லை கெட்டவர்களாவோ இருக்க முடியாது என்பதால் எல்லாருக்கும் எல்லா விதமான கதாபாத்திரமும் மாறி மாறி தான் வரும்.
சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு ஆண்கள்தான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார்கள். ஒன்று ஹீரோ, இன்னொன்று வில்லன். சின்னத்திரையில் இரண்டு பெண்களை மையமாக வைத்து தான் கதையிருக்கும்,
உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
மாமனார், மாமியார் இல்லை. என்னுடைய அப்பாவும் அம்மாவும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் என் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்கள். குழந்தையைப் பிரிந்து இப்படி அடிக்கடி வருவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.