உதயநிதி தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் "மன்மதன் அம்பு' படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் மூன்று பாடல்களைப் பாடுகிறார் படத்தின் ஹீரோ கமல்ஹாசன். அதேபோல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "ஏழாம் அறிவு' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கமல்ஹாசனின் மகள் ஷ்ருதி, அந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு பாடல்களைப் பாடுகிறார். இவர்களைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராவும் விரைவில் திரைத்துறையில் கால் பதிக்கிறார். பாலிவுட் இயக்குநர் ராகுல் தொகாடியா இயக்கும் "சொûஸட்டி' படத்தில் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்று வருகிறார் அக்ஷரா.
தல கால் புரியல!
அஜித்தின் 50-வது படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்க,கெüதம் மேனன் இயக்குவதாக இருந்தது. படத்துக்கு "துப்பறியும் ஆனந்த்' என்ற தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஃபார்முலா கார் ரேஸில் கலந்துகொள்ள வெளிநாடு பறந்துவிட்டார் அஜித்.
இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் தெலுங்கு ஹீரோ ராணாவை வைத்து புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் கெüதம் மேனன். இதனால் அஜித்தின் 50-வது படத்தில் கெüதம் பணியாற்றுவது சந்தேகமே எனப் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதில் வெங்கட் பிரபு இயக்குவார் எனக் கூறப்படுகிறது.
பெரிய பில்ட் அப் கொடுத்து வெளியான விஜய்யின் "சுறா' சுருண்டுவிட்டதால் தன்னுடைய 50-வது படத்துக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டாம்; அது வெறும் எண்ணிக்கையே என அஜித் தெரிவித்துள்ளார்.
அஸினுக்கும் பிசின் என்று பெயர்!
பாலிவுட்டுக்குப் பறந்த அஸின், "காவல்காரன்' படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்ததன் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இந்நிலையில் சல்மான்கான் நடிக்கும் "ரெடி' ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதனால் "காவல்காரன்' படத்தில் தன்னுடைய காட்சிகளை உடனடியாகப் படமாக்கி, தன்னை ஆளை விடுமாறு பட யூனிட்டிடம் டார்ச்சர் செய்து வருகிறாராம். "ஹிந்தியில் வாய்ப்பு குறைந்தவுடன் தமிழுக்கு வந்தார். அங்கு மீண்டும் வாய்ப்பு வர, அஸினுக்குத் தமிழ் கசப்பாகத் தெரிகிறது. பசையுள்ள இடத்தில் பிசின் போல் ஒட்டிக்கொள்கிறார். பிழைத்துக்கொள்வார்' என யூனிட்டார் முணுமுணுக்கிறார்கள்.
யூ டூ கார்த்தி?
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன "விக்ரமார்குடு' தமிழில் "சிறுத்தை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் இயக்கிய சிவா, தமிழிலும் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தப் படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் திடீரென... "அனுஷ்காவின் கால்ஷீட் இல்லை; அதனால் அவர் நடிக்க மாட்டார். அவருக்குப் பதில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்' எனப் பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அனுஷ்கா தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறார். அதிலும் தற்போது வெற்றிகரமான ஹீரோவாக வலம் வரும் கார்த்தியின் படம் என்றால் கட்டாயம் கால்ஷீட் ஒதுக்கிக்கொடுப்பார். அவருடைய கால்ஷீட் இல்லை என்பதில் உண்மை இல்லை. நாயகனின் வேண்டுகோளுக்கு ஏற்பவே கதாநாயகி மாற்றம் நடைபெற்றுள்ளது எனவும் பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நாங்களும் பாடுவோம்ல!
முதல்வர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் "வம்சம்' படத்தை இயக்கும் பாண்டிராஜ் படத்தில் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். அவருடைய "சுவடு சுவடு...' என்ற பாடலைப் பாட, பாடகர்கள் பலரையும் பரிசீலித்திருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் தாஜ்நூர். ஆனால் அவர் எதிர்பார்த்த குரல் அமைப்பு யாருக்கும் அமையவில்லை. இறுதியில் அந்தப் பாடலை இயக்குநர்கள் பாண்டிராஜ், சசிகுமார், சமுத்திரகனி ஆகியோரைப் பாட வைத்து ரெக்கார்டிங் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.