முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆவியா.. ஓவியா!

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "ஓவியா' என்கிற திகில் தொடரின் நாயகியாக நடிக்கிறார் அம்மு. நடிப்பு, தொகுப்பாளினி, டப்பிங் எனப் பிஸியாக இருப்பவரிடம் தொடரின் திகில் அனுபவங்கள் பற்றிப் பேசினோம்: "ஓவியா'வில் ந

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:39 PM
பகிர்:

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "ஓவியா' என்கிற திகில் தொடரின் நாயகியாக நடிக்கிறார் அம்மு. நடிப்பு, தொகுப்பாளினி, டப்பிங் எனப் பிஸியாக இருப்பவரிடம்

தொடரின் திகில் அனுபவங்கள் பற்றிப் பேசினோம்:

"ஓவியா'வில் நடிக்கும் அனுபவம் பற்றி?

ஓவியா ஒரு திகில் தொடர். முதன்முறையாக இதுபோன்ற திகில் தொடரில் நடிக்கிறேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு இறந்துபோன பெண்ணினுடைய ஆவி என் உடம்பில் புகுந்து அவள்  மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போன்ற பாத்திரம். அதை நான் சிறப்பாகச் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு என்னவென்றால் என்னைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்களே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.

பேய்ப் பாத்திரத்தில் நடிக்கப் பயமாக இருக்கிறதா?

நடிப்பதில் பயமாக இல்லை. அதற்கான லோகேஷனுக்குப் போகும் பொழுதும்,அந்த இடங்களைப் பார்க்கும்பொழுதும்தான் பயமாக இருக்கிறது. 

சாதாரண கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும், இதுபோன்ற பேய்க் கதாபாத்திரத்தில்  நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

பேய்ப் பாத்திரம் அவ்வப்போது வந்துபோகிற கதாபாத்திரம் என்பதால் அது ரொம்ப சேலஞ்சிங்காக இருக்கிறது. திடீரென்று முறைக்க வேண்டும், சிரிக்க வேண்டும், கோபப்பட வேண்டும். சில நேரங்களில் ஆக்ரோஷமான சீன்ஸ் எல்லாம் எடுத்து முடித்த பிறகும்கூட அந்தக் கோபத்தில் இருந்து மீண்டுவர கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஒரே சமயத்தில் இரண்டு விதமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக நடிக்கிறபோது அப்படியெதுவும் இல்லை. ஒரே மனநிலையில் இயல்பாய் நடித்துவிட முடியும்.

வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?

வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரை பக்கம் இப்போதைக்குக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். டைரக்டர் கரு. பழனியப்பன் இயக்கத்தில் "மந்திரபுன்னகை' என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர "சிக்குபுக்கு'  பட ஹீரோயினுக்கு டப்பிங் பேசுகிறேன்.

நடிப்பு, டப்பிங், தொகுப்பாளினி இதில் எதைத் கடினமானதாக உணர்கிறீர்கள்?

இதில் எதையுமே நான் கடினமாக நினைக்க வில்லை.  வேலை மட்டுமல்ல; எதையும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம். சுலபம் என்று நினைத்தால் சுலபம்.

திருமணம்?

இதுவரை காதல் வரவில்லை. அதனால் அம்மா விருப்பப்படிதான் என் திருமணம் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.