முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

எத்தனை வண்ண ஓவியங்கள்!

மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள வின்யாசா ஆர்ட் காலரியில் நுழைந்தால், வரிசைவரிசையாக ஓவியங்கள் உங்களை வரவேற்கும். இரண்டு பகுதிகளாக ஓவியங்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். முன்பகுதி முழுக்க ஓவியக்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:11 PM
பகிர்:

மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள வின்யாசா ஆர்ட் காலரியில் நுழைந்தால், வரிசைவரிசையாக ஓவியங்கள் உங்களை வரவேற்கும்.

இரண்டு பகுதிகளாக ஓவியங்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். முன்பகுதி முழுக்க ஓவியக் கண்காட்சி. பின்பகுதி முழுதும் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கும்  ஓவியங்கள்- விற்பனைக்காக.

இப்போது நடைபெறும் கண்காட்சியில் அகஸ்டின் வரைந்த கோட்டு ஓவியங்கள் முதலில் கண்களை ஈர்க்கின்றன. ஷிவராம் வரைந்த அழகான பிள்ளையார் ஓவியங்கள் பல வடிவங்களில்!   

உஷாதேவியின் வீட்டு முகப்பும், முற்றமும், துளசிமாடமும் தனித்தனி அழகுடன் காட்சியளிக்கின்றன.

குடையுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெரியவரின் உருவம் தத்ரூபமாக இருக்கிறது-ஓவியர் சிவபாலன் வரைந்தது.

அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்கள் குறைவாகவும், மக்களையும்,தெருக்காட்சிகளையும் சித்திரிக்கும் ஓவியங்கள் அதிகமாகவும் இருப்பது மக்களின் ரசனை பின்னதையே ஆதரிப்பதாகக் காட்டுகிறது.

மிகப் பெரிய ஓவியங்களாகவும், அதிக விலையுள்ள ஓவியங்களாகவும் இல்லாமல் இருப்பதும் இந்த ஓவியக் கண்காட்சியின் சிறப்பு.

சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வி.என்.பரதன், கே.பாஸ்கரன்,நெல்சன் கென்னடி, ரமேஷ் யந்த்ரா மற்றும் ஆர்.சீனிவாசனின் ஓவியங்களும், உலோக சிற்பங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

"லேண்ட்ஸ்கேப்' என்ற தலைப்பில் கே.பாஸ்கரன் ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. பிரம்மாண்டமான ஆகாயப் பின்னணியில் தூரத்தே தெரியும் படகும் படகோட்டியும், பயணியும் ஓவியரின் கற்பனை வளத்தைக் காண்பிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →