ஞாயிறு கொண்டாட்டம்

செய்து பாருங்கள்! நேந்திரம் பழ பாயாசம்

 தேவையானவை:  நேந்திரம் பழம்-3  அச்சு வெல்லம்-10,  தேங்காய்-1  ஏலக்காய்தூள்-சிறிதளவு  செய்முறை:  நேந்திரம்பழங்களை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டு, பழம் மூழ்கு

தினமணி

 தேவையானவை:

 நேந்திரம் பழம்-3

 அச்சு வெல்லம்-10,

 தேங்காய்-1

 ஏலக்காய்தூள்-சிறிதளவு

 செய்முறை:

 நேந்திரம்பழங்களை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டு, பழம் மூழ்கும் அளவு நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். அதை சிவப்பு நிறம் வரும் வரை கிளற வேண்டும். தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அச்சு வெல்லத்தை நன்றாகப் பொடித்து, நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, வெந்துகொண்டிருக்கும் பழக்கூழில் சேர்க்க வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலை சேர்த்துக் கிளற வேண்டும். பக்குவம் வந்ததும் முதல் பாலையும் அதில்விட்டுக் கிளற வேண்டும். இறுதியில் பொடித்த ஏலக்காயை போட்டு இறக்க வேண்டும். கேரளா ஸ்பெஷல் பாயாசம் தயார்!

 சோள தோசை

 தேவையானவை:

 மக்காச்சோளம்- 1 கப்

 இட்லி அரிசி-1/2 கப்

 உளுந்து-1/4 கப்

 வெந்தயம்- 1 தேக்கரண்டி

 உப்பு-தேவையான அளவு

 செய்முறை:

 சோளத்தை சுடுநீரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து, உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விட்டு தோசையாக வார்த்தெடுக்க வேண்டும். இதற்கு சரியான ஜோடி எள்ளுப்பொடி.

 ஜெஸிந்தா அமலரசி, மருதடியூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT