ஞாயிறு கொண்டாட்டம்

சமையல்

பெரிய வெங்காயம் - 1 கிலோசிறிய வெங்காயம் - 1 கிலோகறிவேப்பிலை - சிறிதுமஞ்சள் தூள் - 2 சிட்டிகைமிளகாய்த் தூள் - 1 கரண்டிநல்லெண்ணெய் - 2 டம்ளர்உப்பு - தேவையான அளவு

ஆர். ஜெயலட்சுமி

வெங்காய வற்றல்

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1 கிலோ
சிறிய வெங்காயம் - 1 கிலோ
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1 கரண்டி
நல்லெண்ணெய் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மற்ற பொருள்களோடு சேர்த்து மூன்று நாள் ஊறவைத்து அரைத்து அதில் சிறிதளவு கடுகு, சீரகம், நல்லெண்ணெய் சேர்த்து பெரிய உருண்டைகளாக உருட்டி வெய்யிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான பொழுது தேவையான அளவு எடுத்து எண்ணெய்யில் பொரித்து புளிவிட்டுச் செய்யும் கூட்டு அல்லது வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்தால் குழம்பின் சுவை கூடும்.

மணத்தக்காளி வத்தல்


தேவையானவை

மணத்தக்காளி - 1 கிலோ
புளித்த தயிர் - 250 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மணத்தக்காளியின் காம்பை அகற்றி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும். தயிரைவிட்டு உப்பை நன்றாகக் கிளறி ஒருநாள் முழுவதும் மூடிவையுங்கள். மறுநாள் சூட்டில் எடுத்துப் போட்டு வெய்யிலில் நன்றாக காயவைக்க வேண்டும். காய்ந்ததும் எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். மணத்தக்காளி வத்தலை எண்ணெயில் வறுத்து குழம்பில் போடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT