ஞாயிறு கொண்டாட்டம்

சினி மினி

நடன இயக்குநர் கூல் ஜெயந்த் இயக்கி நடிக்கும் "யோ யோ' படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து கேட்டால்... "விஸ்வரூபம்' படம் வெளியாகும் வரை வேறு படங்களில் நடிப்பது குறித்து

மனோஜ் கிருஷ்ணா

நடன இயக்குநர் கூல் ஜெயந்த் இயக்கி நடிக்கும் "யோ யோ' படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து கேட்டால்... "விஸ்வரூபம்' படம் வெளியாகும் வரை வேறு படங்களில் நடிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுவரை, ஆண்ட்ரியா அந்தப் படத்தில் நடிக்கிறார்; இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம்'' என்கிறது ஆண்ட்ரியா தரப்பு.

"எந்திரன்' படத்தில் கெüரவ வேடத்தில் நடித்த பிரபல கலை இயக்குநர் சாபு சிரில் மலையாளப் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தீபேஷ் இயக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஏசு கிறிஸ்து வேடம் ஏற்கிறார் சாபு சிரில்.

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான "சகலகலா வல்லவன்' படத்தை தனது குடும்ப நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்ஸ் மூலம் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் சூர்யா. அதற்காக ஏவி.எம். நிறுவனத்திடம் முறையாக உரிமையைக் கேட்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. "நல்ல விஷயம்; நீங்களே ஹீரோவாக நடித்துவிடுங்கள்; நாங்கள் படத்தைத் தயாரிக்கிறோம்' என ஏவி.எம். நிறுவனத்தில் கூறப்பட்டதாம். 2013-ம் ஆண்டு வரை பிஸியாக உள்ள சூர்யா அதற்குப் பிறகு "சகலகலா வல்லவன்' ரீமேக்கில் நடிக்கலாம்.



தான் நடிக்கும் படங்களில் ஓவியாவை கதாநாயகி ஆக்குமாறு இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் கேட்டு வருகிறார் விமல். இவர்கள் கூட்டணியில் உருவான "களவாணி', "கலகலப்பு' படங்கள் ஹிட் ஆனதால்தான் இந்த சென்டிமெண்ட் என்கிறார். எழில் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ள விமல், அந்தப் படத்திலும் ஓவியாவுக்கே "ஓ' போட்டிருக்கிறார். ஆனால் எழிலோ "நோ' போட்டு வருகிறார்.

எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து மூன்று படங்கள் நடிப்பதாக இருந்தால்தான் "சகுனி'யில் வாய்ப்பு என்ற நிபந்தனையோடு நாயகி ப்ரணிதாவை ஒப்பந்தம் செய்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால் படத்தில் அவருடைய நடிப்புத் திறமை குறித்து பேசப்படாததால் அடுத்து அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. படத்தில் பெயர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; ஒப்பந்தம் ரத்தானால் போதும் என்கிறது



ப்ரணிதா தரப்பு.

இதுவரை நகர்ப்புறப் பின்னணியில் மட்டுமே படங்களை எடுத்து வந்த ராதாமோகன் முதல் முறையாக கிராமியப் பின்னணியில் இயக்கி வரும் படம் "கெüரவம்'. வழக்கம்போல் பிரகாஷ் ராஜ்தான் தயாரிப்பாளர். "கர்ணன்' படத்தைப் போலவே "கெüரவம்' படத்தையும் டிஜிட்டலில் எடுத்து வெளியிட முயற்சிகள் நடக்கிறதே; அப்படியானால் டைட்டில் வைப்பதில் பிரச்னை ஏற்படுமே' என்று கேட்டால் "அந்த விஷயத்தில் கெüரவம் பார்க்க மாட்டேன்; ஒரிஜினல் டைட்டிலை விட்டுக்கொடுத்துவிட்டு வேறு டைட்டிலை வைப்பேன்' என்கிறார் ராதாமோகன்.





 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT