தெரிந்து கொள்ளுங்கள்
* மொழி அடிப்படையில் 1956-ல் சென்னை மாநிலம் உருவாகி, 14.01.1969 முதல் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. * இந்தியாவில் முதல் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் 27-04-1918-ல் திரு.வி.கவும், திரு.வா
* மொழி அடிப்படையில் 1956-ல் சென்னை மாநிலம் உருவாகி, 14.01.1969 முதல் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* இந்தியாவில் முதல் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் 27-04-1918-ல் திரு.வி.கவும், திரு.வாடியாவும் தொடங்கினார்கள்.
* பூண்டி அரங்கநாத முதலியார்தான் சென்னை ஷெரிஃபாக நியமிக்கப்பட்ட இந்தியர்.
Advertisement
* 1878-ஆம் ஆண்டு நாட்டின் முதல் வேளாண்மைக் கல்லூரி சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டு, 1907-ல் கோவைக்கு மாற்றப்பட்டு, 1971-ல் பல்கலைக்கழகமாக உருவானது.
* கிறிஸ்துவ மதச் சங்கம் சென்னையில் 1831-ல் முதல் தமிழ் பத்திரிகையை "தமிழ் மாகசின்' என்ற பெயரில் வெளியிட்டது.
* முதல் தமிழ் வார இதழ் "தினவர்த்தினி' 1856-ல் வெளிவந்தது.
* 1870-ம் ஆண்டு கல்வி இலாகா "ஜனவிநோதினி' என்ற மாத இதழை வெளியிட்டது.
* தமிழின் முதல் நாளிதழ் "சுதேசமித்திரன்' 1882-ல் தொடங்கப்பட்டது.
* "தேசோபகாரி' என்ற முதல் மாத இதழ் 1861-ல் தமிழில்தான் வெளிவந்தது.
* 1881-ஆம் ஆண்டு 24 இணைப்புகளுடன் சென்னையில் தொலைபேசி சேவை தொடங்கியது.
* மிகப்பெரிய வளைகுடா மெக்சிக்கோ வளைகுடா. பரப்பு: 5,80,000 சதுரமைல்.
* மிகப்பெரிய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல். ஆழம்:12,925 அடி.
* மிகப்பெரிய பீடபூமி திபேத் பீடபூமி. பரப்பு: 77,000 சதுர மைல்
* மிகப்பெரிய தீவு க்ரீன்லாந்து. பரப்பு: சுமார் 8,40,000 சதுர மைல்
* மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். பரப்பு: 1,25,000 சதுரமைல்.
* மிகப்பெரிய டெல்டா பகுதி பங்களாதேஷில் உள்ளது. பரப்பு: 30,000 சதுரமைல்.
* மிகப்பெரிய நாடு ரஷியா.
* மிகப்பெரிய அருங்காட்சியகம் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம். இது நியூயார்க்கில் உள்ளது.
* மிகப்பெரிய அரண்மனை சீனாவிலுள்ள பெய்ஜிங்கின் இம்பீரியல் அரண்மனை.
* மிகப்பெரிய வங்கி அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள உலக வங்கி.
* மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத்திலுள்ள அரசர் கலீத் பன்னாட்டு விமான நிலையம்.
* மிகப்பெரிய கார் நிறுத்துமிடம் கனடாவிலுள்ள எட்மாண்டன் நகரின் மேற்கு எட்மாண்டன்மால்.
ஆதாரம்: "உலக பொதுஅறிவு 2057 கேள்வி பதில்' என்ற நூலிலிருந்து
பட்டம் கொடுத்தவர்கள்
* காந்திக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
* தாகூருக்கு "குருதேவ்' பட்டம் கொடுத்தவர் காந்தியடிகள்.
* காந்திக்கு "தேசப்பிதா' பட்டம் கொடுத்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.
* சுபாஷ் சந்திரபோஸýக்கு "நேதாஜி' பட்டம் கொடுத்தவர்
காந்தியடிகள்.
* உ.வே.சா.விற்கு "தமிழ் தாத்தா' பட்டம் கொடுத்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி.
* கம்பருக்கு "கவிச்சக்கரவர்த்தி' பட்டம் கொடுத்தவர்
நாதமுனி.
* தேசிக விநாயகம் பிள்ளைக்கு "கவிமணி' பட்டம் கொடுத்தவர் ராஜா அண்ணாமலை செட்டியார்.
* மு.கதிரேசன் செட்டியாருக்கு "பண்டிதமணி' பட்டம் கொடுத்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை.
* வ.உ.சி.க்கு "கப்பலோட்டிய தமிழன்' பட்டம் கொடுத்தவர் ம.பொ.சி.
* டி.கே.சண்முகத்திற்கு "ஒüவை' பட்டம் கொடுத்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்.
* என்.எஸ்.கிருஷ்ணனுக்கு "கலைவாணர்' பட்டம் கொடுத்தது நடராஜா கல்விக்கழகம்.
விருதுநகர் மாவட்டத்தில் இனிஷியல் உள்ள ஊரின் பெயர்கள்
O. மேட்டுப்பட்டி
N. மேட்டுப்பட்டி
K. மேட்டுப்பட்டி
A. ராமலிங்காபுரம்
T. ராமலிங்காபுரம்
E. குமாரலிங்காபுரம்
E. முத்துலிங்காபுரம்
V. முத்துலிங்காபுரம்
M. புதுப்பட்டி
W. புதுப்பட்டி
A. புதுப்பட்டி
K. சொக்கலிங்கபுரம்
M. விளாம்பட்டி
B. லெட்சுமிபுரம்
P. லெட்சுமியாபுரம்
E. ராமநாதபுரம்
M. ரெட்டியபட்டி
T. மீனாட்சிபுரம்
K. ஆத்திப்பட்டி
K. முத்துலிங்காபுரம்
T. சேடபட்டி
K. மடத்துப்பட்டி
M. நாகலாபுரம்
E.T. ரெட்டியபட்டி
P. நாகலாபுரம்
ஓலைச் சுவடிகளின் பாடவரிசை
* அரிச்சுவடி
* எண்சுவடி
* குழிப்பெருக்கல்
* வருஷப்பிறப்பு
* மூதுரை
* கதிர்காமாலை
* செல்லிமாலை
* ராஜகோபாலமாலை
* கருவையந்தாதி
* நிகண்டு
திருமணம் பலவிதம்!
* பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குறும்பர் என்ற இனத்தில் நடக்கும் திருமணத்தில் மணப் பெண்ணுக்குப் புரோகிதர்தான் தாலி கட்டுவார்.
* ஜெர்மனியில் திருமணநாளுக்கு முதல் நாள், மணமகன் வீட்டு வாசலில் மண் பானையைப் போட்டு உடைக்கிறார்கள்.
* மாங்கல்யக் கயிறு ஒன்பது இழைகளை உடையது. இந்த ஒன்பது இழைகளும் காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. அவை, வாழ்க்கையை உள்ளபடி புரிந்து கொள்ளுதல், மேன்மை, ஆற்றல், தூய்மை, தெய்வீக நோக்கம், உத்தம குணங்கள், விவேகம், தன்னடக்கம், தொண்டு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது.
* இந்து திருமணத்தில் அக்னியை வணங்குதல், வாக்கு தானம், கன்னிகா தானம், சப்தபதி, திருமணத்தின் முக்கிய அம்சமான தாலி கட்டுதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குகள் உள்ளன. திருமணத்திற்காக உண்டாக்கப்படும் புனித அக்னியை மணமக்கள் வலம் வந்து ஏழு அடி எடுத்து வைப்பது போன்ற சடங்குகளைச் செய்தால் மட்டுமே திருமணம் செல்லுபடியாகும்.
* நைஜீரியாவில் அந்நாட்டு தேசிய கீதம் ஒருவருக்குத் தெரியவில்லையென்றால், அவர் பிரம்மச்சாரியாகவே இருந்துவிட வேண்டியதுதான். திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யும் முன்பாக தம்பதிகள் இருவரும் தேசிய கீதத்தைக் கட்டாயம் பாடவேண்டும்.
* ஜப்பான் நாட்டில் ஒருசில இடங்களில் கல்யாணச் சடங்குகளில் ஒன்று, மணப் பெண்ணின் புருவங்களை நீக்கிவிடுவது ஆகும். அப்பொழுதுதான் அப்பெண்ணை மணமானவள் என்று ஒப்புக் கொள்வார்கள்.
* பசிபிக் கடலில் உள்ள அரூ தீவுகளில் வாழும் அரஃபுராஸ் என்னும் இனத்தவரில் கல்யாணம் நடக்கும்போது மணப்பெண்ணின் கண்களை ஒரு துணியால் கட்டிவிட்டுத்தான் மணமகன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டுவான். மணப் பெண்ணின் கண்களைக் கட்டும் துணி, மணமகனால் கொடுக்கப்படுவது வழக்கம்.