முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பப்பாளியின் மகிமை

*  அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி  *  கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம் என்பதால் பப்பாளி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. 100 கிராம் பப்பாளியில் கிடைக்கும் கலோரியின் அளவு 32 தான்.  *

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:32 am IST
பகிர்:

*  அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி

 *  கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம் என்பதால் பப்பாளி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. 100 கிராம் பப்பாளியில் கிடைக்கும் கலோரியின் அளவு 32 தான்.

 *  பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு போன்றவை ரத்தக் கொதிப்பைக் குறைக்கும்.

Advertisement

 *  வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்களுக்கும் ஜீரணசக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியில் "பாப்பைன்' எனும் பொருள் உதவுகிறது.

 *  பலமான விருந்துக்குப் பிறகு பப்பாளி பழத்துண்டுகள் ஐந்தாறு சாப்பிட்டால் போதும். உடனே ஜீரணமாகிவிடும்.

 *  உடலில் இறந்து போன செல்களை நீக்கவும், தோலை வளவளப்பாக வைக்கவும் பப்பாளி சிறந்த கருவி.

 *  மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகளை எளிதில் குணமாக்கும்.

 *  100 கிராம் பப்பாளி பழத்தில் பெண்களின் ரத்தசோகையைப் போக்கும் திறன் உள்ளது.

 *  பப்பாளியில் உள்ள " பெப்சின்' என்ற பொருள் மலச்சிக்கலும், வயிற்றுக்கோளாறும் வராமல் தடுக்கிறது.

 *  மாம்பழத்திற்கு அடுத்த வைட்டமின் "ஏ' அதிகம் உள்ள பழம் பப்பாளி.

 *  பப்பாளியை தொடர்ந்து உட்கொண்டால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

 *  ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி எலுமிச்சம்பழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும். இதே காலகட்டத்தில் தினமும் ஒரு பப்பாளி பழமும் சாப்பிட்டு வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.