சமையல்: பச்சை மொச்சை பருப்பு சாம்பார்
தேவையானவை:மொச்சைப்பயறு- 100 கிராம், மிளகாய் வற்றல்- 5, தனியா, பெருங்காயப்பொடி- 1 தேக்கரண்டி, சீரகம்-1/2 மேசைக்கரண்டி, தேங்காய்- 1 மூடி, புளி- சிறிதளவு, அச்சு வெல்லம்-1 , கசாகசா, கடுகு- 1 மேசைக்கரண்டி,
தேவையானவை: மொச்சைப்பயறு- 100 கிராம், மிளகாய் வற்றல்- 5, தனியா, பெருங்காயப்பொடி- 1 தேக்கரண்டி, சீரகம்-1/2 மேசைக்கரண்டி, தேங்காய்- 1 மூடி, புளி- சிறிதளவு, அச்சு வெல்லம்-1 , கசாகசா, கடுகு- 1 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு, எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை: சாம்பார் செய்யும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்வீட்டு கொதித்ததும் மொச்சைப் பருப்பைப் போட வேண்டும். வற்றல், சீரகம், பெருங்காயப்பொடி, தனியா ஆகியவற்றை சிறிது எண்ணெய்விட்டு வறுக்க வேண்டும். அதனுடன் துருவிய தேங்காய், கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். மொச்சைப் பயறு வெந்ததும் அரைத்த விழுது, கரைத்த புளி, அச்சுவெல்லம், உப்பு போட்டு கொதித்ததும், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்க வேண்டும். கடைசியாக கடுகைத் தாளித்துக் கொட்டி கீழே இறக்க வேண்டும்.