செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்?
"பல்லுப் போனால் சொல்லு போச்சு' என்பது புதுமொழி. இனி பிறக்கப் போகும் குழந்தைகள் கையில் செல்லோடு பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாருடைய கைகளிலும் ஒட்டிப் பிறந்த விரல் போல ஆகிவிட்டன செல்போன்கள்.
"பல்லுப் போனால் சொல்லு போச்சு' என்பது புதுமொழி.இனி பிறக்கப் போகும் குழந்தைகள் கையில் செல்லோடு பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.எல்லாருடைய கைகளிலும் ஒட்டிப் பிறந்த விரல் போல ஆகிவிட்டன செல்போன்கள்.
400 ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அவரவர் வசதிக்கேற்ற செல்போன்கள். இப்போதெல்லாம் பஸ்ஸின் கூட்ட நெரிசலில் செல்போன்களைத் திருடிச் செல்வது அதிகரித்துவிட்டது. எனவே செல்போன்களுக்கும் வந்துவிட்டது இன்ஷூரன்ஸ்! செல்போன் திருடுப் போனால், சேதமடைந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு வாங்கிக் கொள்ளலாம்.
"ஆனால் அதிலும் கூட பிரச்னைகள் இருக்கின்றன'' என்கிறார் எஸ்.சரோஜா. ""செல்போன்களுக்கான இன்ஷூரன்ûஸப் பெறுவதற்குள் நடைமுறையில் போதும் போதும் என்றாகிவிடுகிறது'' என்கிறார் அவர்.
சென்னை அடையாறில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இண்ற்ண்க்ஷ்ங்ய் ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ் ஹய்க் ஸ்ரீண்ஸ்ண்ஸ்ரீ அஸ்ரீற்ண்ர்ய் எழ்ர்ன்ல் என்ற நுகர்வோர் நலன் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அவர்.
"இப்போது விலை அதிகமான செல்போன்கள் வந்துவிட்டன. செல்போன் வாங்கும்போதே செல்போனை இன்ஷ்யூர் செய்துவிடுகிறார்கள். அதற்கு எனத் தனியாகப் பணம் கூட சில நிறுவனங்களில் வாங்குவதில்லை.
செல்போன் திருடு போனாலோ, நெருப்பு, விபத்து போன்றவற்றால் சேதமடைந்தாலோ, பயங்கரவாதிகளின் தாக்குதலில் செல்போன் சேதமடைந்தாலோ நீங்கள் செல்போனுக்குரிய இன்ஷூரன்ஸ் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் என்றால், செல்போனுக்கும் அதனுள்ளிருக்கும் பேட்டரிக்கும் மட்டும்தான் இன்ஷூரன்ஸ். செல்போனுக்காக நீங்கள் கூடுதலாக வாங்கும் சிம்கார்டு, க்ஹற்ஹ கேபிள், சார்ஜர், மெமரி கார்டு, கார்டு அடாப்டர் போன்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ் இல்லை.
செல்போன் திருடு போனாலோ, சேதமடைந்தாலோ இனிக் கவலையில்லை. இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், உண்மையிலேயே செல்போன் திருடு போய்விட்டால், அதற்குரிய இன்ஷூரன்ஸ் தொகையைப் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல.
செல்போன் திருடு போனவர் ஒருவர், அதை வாங்கிய கடைக்குச் சென்று இன்ஷூரன்ஸ் பற்றிக் கேட்டால் அவர்கள் சில கேள்விகளைக் கேட்பார்கள்:
1. செல்போன் திருட்டுப் போன 48 மணி நேரத்துக்குள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டீர்களா? நீங்கள் புகார் கொடுத்ததற்கான சான்று உள்ளதா?
2. செல்போனின் விலை ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் காவல் நிலையத்தில் எஃப் ஐஆர் போட வேண்டும். போட்டுவிட்டார்களா?
3. நீங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் அதைத் தேடி அலைந்தும் செல்போன் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சர்ய் பழ்ஹஸ்ரீங்ஹக்ஷப்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் - ஐ வாங்கிவிட்டீர்களா?
4. செல்போன் தொலைந்துவிட்டதால் அதன் சிம் கார்டை செயலிழக்கச் செய்துவிட்டீர்களா? அதற்கு நீங்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தின் நகல் உங்களிடம் உள்ளதா?
5. போன் வாங்கியபோது உங்களுக்குத் தந்த ஒரிஜினல் பில் பத்திரமாக இருக்கிறதா?
இந்தக் கேள்விகளை கேட்டதும் செல்போன் திருடு போய்விட்டது என்று சொல்லச் சென்றவர் திகைத்து நிற்பார்.
இப்படி அவர்கள் கேட்பதெல்லாம் இருந்தால், கடையில் ஒரு ஃபார்ம் கொடுப்பார்கள். அதைத் தவறில்லாமல் பூர்த்தி செய்து கொடுத்து, அந்த ஃபார்ம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குப் போய், அவர்கள் அதை அப்ரூவல் செய்ய ஆயிரம் விளக்கங்கள் கேட்டு, அதற்குப் பின்பு இன்ஷூரன்ஸ் தொகையைப் பெற முடியும்.
செல்போன் திருடுபோய்விட்டதாகக் கடையில் சொன்னாலேயே, அதற்கான இழப்பீட்டைக் கொடுத்துவிடுவார்கள் என்றுதான் செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள். ஆனால் ஒரு செல்போன் திருடு போன பின்பு, இவ்வளவு நடைமுறைச் சடங்குகள் இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.
செல்போன் திருடுபோன இரண்டு நாட்களுக்குள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரியாது. புகார் கொடுக்காவிட்டால் செல்போன் இன்ஷூரன்ஸ் கிடைக்காமல் போய்விடும்.
செல்போனை நீங்கள் மறதியாக எங்கேயோ வைத்து, அதனால் திருடு போனதாகச் சொன்னால் அதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கார் கண்ணாடியைத் திறந்துவைத்துவிட்டு கார் சீட்டில் போன் வைத்திருந்தேன்; திருடு போய்விட்டது என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
"என்னுடைய செல்போனை மச்சான் எடுத்துச் சென்றார். திருடு போய்விட்டது'' என்று சொன்னால் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்காது.
அதுபோல இன்ஷூரன்ஸ் தொகையை செல்போனின் வயதுக்கேற்பத் தீர்மானிப்பார்கள். செல்போன் வாங்கி 5 நாட்களில் திருடு போனால் அதற்கு நிர்ணயிக்கும் இன்ஷூரன்ஸ் தொகையைப் போல, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருடப்படும் செல்போனுக்குக் கிடைக்காது.
இப்படி செல்போன் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி செல்போன் வாங்கும் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களாகட்டும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களாகட்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டத்தையே கொண்டு வந்திருப்பார்கள். எனவே இவற்றைப் பற்றி விளக்கமாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார் சரோஜா.