முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குறளின்(இரு)குரல்கள்!

ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதி கடம்பா நகரில் வசித்து வரும் ரவிச்சந்திரன், விஜயகுமாரி தம்பதியரின் மகன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:22 AM
பகிர்:

ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதி கடம்பா நகரில் வசித்து வரும் ரவிச்சந்திரன், விஜயகுமாரி தம்பதியரின் மகன் பரத். அதே ராமநாதபுரம் சேதுபதி நகரில் வசிக்கும் பரமசிவம், மகராசி தம்பதியரின் மகள் ரக்சனா. இருவருக்கும் தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிய வேளையில் ரூ.10ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌர
 வித்திருக்கிறது.
 இருவரும் அப்படி என்ன தான் சாதனை புரிந்தார்கள் எனக் கேட்ட போது இருவருமே மனப்பாடமாக 1330 குறள்களையும் சிறிதும் பிழையின்றி, கொஞ்சமும் தடுமாறாமல் ஒப்பிக்கின்றனராம். 133 அதிகாரங்களில் எந்த அதிகாரத்தின் பெயரைச் சொன்னாலும் உடனடியாக அந்த அதிகாரத்தில் உள்ள முதல் குறளில் இருந்து மனப்பாடமாகவே அனைத்து குறள்களையும் தொடர்ந்து சொல்கின்றனர். கடந்த 13.4.2012 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பரத்துக்கும், அடுத்த ஆண்டு 25.4.2013 ஆம் தேதி அப்போதைய கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகைச் செல்வன் ரக்சனாவுக்கும் பரிசு வழங்கி பாராட்டி இருக்கின்றனர்.
 பரிசு பெற்றது குறித்து பரத் கூறுகையில், ""திருக்குறளை ஆர்வமுடன் மனப்பாடம் செய்ய முடிவு செய்தேன். எனது எண்ணத்தை என் தாத்தா ராமசுப்புவிடம் சொன்னேன். அவரோ குறளை விரைந்து மனப்பாடம் செய்வது எப்படி? என்று கற்றுக் கொடுத்தார். அவரது விடா முயற்சியும், என் ஆர்வமும் என்னை முதல்வரிடம் பரிசு பெறும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. எனக்குப் பிறகு ரக்சனாவும் தொடர்ந்து முயன்று அவரும் தமிழக அரசின் பரிசைப் பெற்றார்''
 குழந்தைகள் பலருக்கும் திருமந்திரம், திருவாசகம், திருக்குறள் மற்றும் தாயுமானவர் பாடல்களை இலவசமாக சொல்லிக் கொடுத்து வரும் ராமசுப்புவிடம் குறளை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்துக் கேட்டோம்:
 ""முதலில் ஒவ்வொரு அதிகாரங்களிலும் உள்ள 10 குறள்களையும் சாதாரணமாக படிக்க சொல்லி பிறகு அப்படியே மனப்பாடமாக படிக்க வைப்பேன். பொதுவாக குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகம் என்பதால் ஒரு நாளைக்கு 19 அதிகாரங்களை மனப்பாடம் செய்யும் நிலைக்கு கொண்டு வருவேன். இதே போல 7 நாட்களுக்கும் தலா 19 அதிகாரங்கள் வீதம் மொத்தம் 133 அதிகாரங்களையும் மனப்பாடம் செய்ய வைக்கிறேன். பிறகு 1330 குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவிக்க வைக்கிறேன்.
 ராமநாதபுரம் தமிழ்ச்சங்க விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும் பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த போட்டியிலும் பங்கேற்று தமிழக அரசின் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். என்றார் ராமசுப்பு.

 
 

முழு கட்டுரையைப் படிக்க →