ஞாயிறு கொண்டாட்டம்

நாடோடி கனவு

ஆர்.ஆர். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நாடோடி கனவு'. கதாநாயகனாக மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுப்ரஜா நடிக்கிறார்.

DIN

ஆர்.ஆர். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நாடோடி கனவு'. கதாநாயகனாக மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுப்ரஜா நடிக்கிறார். கிரேன் மனோகர், விஜய் கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். சபேஷ் முரளி இசையமைக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் வீர செல்வா. பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட சூழல் உருவானது என்பதை சொல்லுவதே திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு கதாபாத்திரங்களால் மொத்த ஊர் மக்களே சொந்த மண்ணை விட்டு வெளியேறுகிறார்கள். அதன் பின் அந்த கிராமத்தில் உள்ள அந்த காதல் ஜோடி என்ன செய்தார்கள். வெளியேறிய மக்கள் கிராமத்துக்கு திரும்பினார்களா என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களுடன் சொல்லுவதே கதைக் கரு. பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இம்மாத வெளியீடாக படம் திரைக்கு
வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டிலிருந்து வேலை! பென்சில் பேக்கிங் மோசடி நடப்பது எப்படி?

வெளி மாவட்ட மீனவர்களை சிறைப்பிடித்த கோடியக்கரை மீனவர்கள்!

காஸாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல் முதற்கட்ட நடவடிக்கை!

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT