ஞாயிறு கொண்டாட்டம்

எடை குறைக்க நடையே சிறந்தது

முதலில் நடையின் பெருமையை அறிந்து கொள்வோம்.

வர்ஷினி

முதலில் நடையின் பெருமையை அறிந்து கொள்வோம்:

  • நரம்புகள் வலுவடைகின்றன. இதன் பலன் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. 
  • வெளியில் நடப்பதால் நல்ல காற்றோட்டத்தை அனுபவிக்கலாம், இதனால் கூடுதல் ஆக்ஸிஜன் கிடைத்து, நமது உடலில் உள்ள கெட்ட ரசாயனங்களை வெளியேற்றுகிறது.
  • ரத்த ஓட்டம் சீராகிறது. இருதயம் வலுபெறுகிறது, சீராகிறது.
  • தினமும் காலை அல்லது மாலை 40 நிமிடங்கள் நடப்பதால் சுறுசுறுப்படைந்து மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
  • இனி நடைப்பயிற்சியை வைத்து 
  • எடையைக் குறைக்க என்னென்ன 
  • செய்ய வேண்டும் என பார்ப்போம்:
  • தினமும் குறைந்தது 15,000 அடிகளாவது நடக்க வேண்டும்.
  • தினமும் மூன்று தடவை, 20 நிமிடங்கள் நடக்க முயற்சி செய்யுங்கள். நீண்ட நடையை விட இது சிறந்தது.
  • உயர்ந்து செல்லும் வழிகளில் நடப்பது ரொம்ப நல்லது. முதலில் கஷ்டமாக இருக்கும். ஆனால் பழகியபின், வேகத்தை அதிகரிக்கலாம்.
  • நடப்பதற்கு முன் பச்சை தேநீர் அருந்தவும். இதன் மூலம் நமது உடலில் உள்ள கூடுதல் கிலோ கலோரிகளை எரிக்க இயலும்.
  • நடக்கும்போது நடுநடுவே, ஒவ்வொரு நிமிட இடைவெளி விடுவது மேலும் நல்லது.
  • நடக்கும்போதே, கை கால்களை தூக்கி இறக்கி, உட்கார்ந்து எழுந்து இருபக்கமும் உடலை அப்படியும் இப்படியும் அசைப்பது போன்றவற்றையும் மேற்கொண்டால், இருதய துடிப்பு அதிகமாவதுடன், நிறைய கலோரிகளும் எரிந்து எடை குறைய வாய்ப்பு ஏற்படும்.
  • சர்க்கரை கலந்த குளிர்பானங்களைத் தவிர்க்கவும். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மீறி அருந்தினால், எரிந்த கலோரிகளை விட கூடுதலாக கலோரிகள் சேர்ந்துவிடும்.
  • சுறுசுறுப்பாக நடப்பது நலம். வெறுமென நடக்க வேண்டும் என்று நடக்காதீர்கள். சுறுசுறுப்பாக நடப்பதன் மூலம் இடுப்புப் பகுதி கரைந்து மேலும் எடுப்பாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT