ஞாயிறு கொண்டாட்டம்

சப்பாணி வேடத்தில் நாகேஷ்

கமல் நடித்த  "பட்டாம்பூச்சி',  "தாம்பத்யம் ஒரு சங்கீதம்',  "இவர்கள் வருங்கால தூண்கள்'  உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன்.

DIN

கமல் நடித்த  "பட்டாம்பூச்சி',  "தாம்பத்யம் ஒரு சங்கீதம்',  "இவர்கள் வருங்கால தூண்கள்'  உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19}ஆவது தயாரிப்பாக, உருவாகி வரும் படம் "மரகதக்காடு'. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  மங்களேஸ்வரன் கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு இயக்குநர் பாரதிராஜா பேசும் போது... ""கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். கமல் அழகாக இருந்ததால்தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட்  ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது''  என்றார் பாரதிராஜா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு

நில அபகரிப்பு வழக்கு: மு.க. அழகிரியின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தொழிலதிபா் கைது: அக்.30 வரை காவலில் விசாரிக்க அனுமதி

ஆணவக் கொலைகளைத் தடுக்க ஆணையம்: இடதுசாரிகள், விசிக வரவேற்பு

SCROLL FOR NEXT