ஞாயிறு கொண்டாட்டம்

எனை சுடும் பனி

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  "எனை சுடும் பனி'.  புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.  உபாசனா, சுமா பூஜாரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

DIN


எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  "எனை சுடும் பனி'.  புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.  உபாசனா, சுமா பூஜாரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இயக்குநர் பாக்யராஜ் கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிங்கம் புலி,  மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஷேவா கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். இயக்குநரிடம் பேசும் போது... ""சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்துப் பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். 

வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன்.  அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பது திரைக்கதையின் சுவாரஸ்யம்.  காதலுக்கு எதிரியாக இருக்கும் ஒரு குற்ற சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக் கொண்டு வரும் அதிகாரியாக  பாக்யராஜ் நடிக்கிறார்.அந்தப் பகுதிகள் யாவும் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது''  என்றார் இயக்குநர்.   ஒளிப்பதிவு  -   வெங்கட். இசை -    அருள்தேவ். பாடல்கள்  -    ராம்ஷேவா வசந்த், கானா சரண்,  கலை  -  அன்பு, நடனம் -     சாண்டி , சிவசங்கர், லாரன்ஸ்சிவா, சண்டை - டேஞ்சர் மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT