ஞாயிறு கொண்டாட்டம்

ஐ.டி ஊழியரின் புதிய விவசாய முறை

மண் இல்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? சாத்தியம் தானா? ஆமாம் மண்இல்லாமல் விவசாயம் செய்து வெற்றியும் கண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம்கோபால். எப்படி இது 

வனராஜன்

மண் இல்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? சாத்தியம் தானா? ஆமாம் மண்இல்லாமல் விவசாயம் செய்து வெற்றியும் கண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம்கோபால். எப்படி இது சாத்தியமானது அவரிடமே கேட்டோம்: 
""சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்தேன். 5 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் யூடியூபில் காண்பித்த விடியோ தான் என் வாழ்க்கை மாற காரணமாக இருந்தது. ஹைட்ரோபோனிக்ஸ் எனும் மண்ணில்லாமல் செடி மற்றும் தாவரங்கள் வளரும் முறையை பற்றிய வீடியோ தான் அது.
அதைப் பார்த்த நான் அந்த விவசாய முறையால் ஈர்க்கப்பட்டு அதை ஒரு தொழிலாக செய்ய முடிவெடுத்தேன். ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் என்ன என்று முழுமையாக தெரிந்து கொண்டு தான் இந்தத் துறையில் இறங்கினேன். 
காய்கறிகள், செடிகள் மற்றும் தாவரங்களை சமமான நிலம் அல்லது வீடுகளிலேயே வெறும் தண்ணீர் மட்டும் கொண்டு மண் இல்லாமல் வளர்க்கக்கூடிய முறையே ஹைட்ரோபோனிக்ஸ். செடிகளை வளர்க்க தண்ணீர் மட்டுமே போதும். 
மண் என்பது பிடிமானம் தான். 
தண்ணீரிலும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துகள் உள்ளன. மரம் கூட தண்ணீரில் வளர்க்க முடியும் என்பது தான் உண்மை.  ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒரு விதமான அறிவியல்.இது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு விவசாய முறையாக உள்ளது. 
தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை, இடமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஹைட்ரோபொனிக்ஸ் முறை சரியான தீர்வாக அமைந்துள்ளது. இம்முறையில் கீரை வகைகள், கத்தரிக்காய், புதினா, என்று பல வகையாக காய்கறிகளை விளைவிக்க முடியும். வீட்டின் மொட்டை மாடி, சிறிய நிலப்பகுதி என எங்கும் பயிரிடமுடியும். குறைந்த மனித உழைப்போடு, குறைந்த செலவில் அதிக லாபமும், விளைச்சலும் கிடைத்து சத்தான காய்கறிகள் கிடைக்கின்றது. ''
நாம் செடிக்கு 1 லிட்டர் தண்ணீர் விட்டால் அதில் வெறும் 17 சதவிகிதம் மட்டும் செடிக்கு செல்கிறது. மீதமிருக்கும் தண்ணீரை வெப்பம், மண் போன்றவை உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் இந்த முறையில் செடிக்கு என்ன தேவை அந்த அளவு மட்டுமே தண்ணீர் தேவைப்படும். உதாரணமாக 1 ஏக்கரில் 30 ஆயிரம் செடிகளை வளர்க்க வேண்டிய இடத்தில் இந்த முறையால் 1 லட்சம் செடிகளை வளர்க்க முடியும். 
தண்ணீரின் தேவையும் மிகவும் குறைவு.  
ஒரு செடிக்கு தேவை சூரிய ஒளி, கார்பன்டை ஆக்சைடு, தண்ணீர், தாதுக்கள் தான் முக்கியம் அதுவே அதன் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. இதனை நாங்கள் இந்த முறையில் ஒரு செடிக்கு சரியான அளவில் கொடுப்பதால் அதன் வளர்ச்சி நாம் நினைத்தது போல் நடக்கிறது. ''
நான் எம்பிஏ முடித்துவிட்டு யூகே-வில் பணியாற்றி கொண்டிருந்தேன். சென்னை திரும்பி எனது சொந்த ஐடி நிறுவனத்தை நடத்தி வந்தேன். 
அப்போது மூன்று நண்பர்களுடன் இணைந்து தலா 5லட்சம் முதலீட்டில் தொடங்கியது தான் இந்த தொழில்.  2 ஆண்டுகளில் நாங்கள் எதிர்பார்க்காத நல்ல வளர்ச்சி பெற்றது.  அதனால் முழுமையாக ஹைட்ரோபோனிக்ஸ் பக்கம் என் கவனத்தை திருப்பினேன்''  என்கிறார் ஸ்ரீராம்.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையை இந்தியா முழுதும் தனது நிறுவனம் மூலம் விரிவாக்குவதற்கு தீவிரமாக உழைத்து வரும் ஸ்ரீராம்  Future Farms என்ற 70 பேர் கொண்ட குழுவுடன் 16 வகையான பயிர்களை 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில்  செடிகளை வளர்த்து வருகிறார். குறிப்பாக டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா என எல்லா முக்கிய மாநிலங்களிலும் இவர்களின் விவசாய பண்ணைகள் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT