ஆல்பம்
நடிகர் விபின், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சிம்புவின் குரலில் ஆல்பம் பாடல் ஒன்றை சதாசிவம் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளார்.
நடிகர் விபின், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சிம்புவின் குரலில் ஆல்பம் பாடல் ஒன்றை சதாசிவம் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளார். பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரி தான் இந்த ஆல்பத்தின் பெயர். பாரதியின் வரிகள் மீது இளைஞர்களுக்கு எப்போதும் தனிப்பற்று உண்டு.
அந்த வகையில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த சிம்புவின் குரலில், மனதை கவரும்படியான விபினின் உணர்வுபூர்வமான நடிப்பில், ஸ்ரீநாத் பிச்சை இசையில், எஸ். சந்தோஷ் குமார் ஒளிப்பதிவில், கார்த்திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், இந்த ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளது சதாசிவம் கிரியேஷன்ஸ். இந்த ஆல்பம் பாடலைத் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் அடுத்தடுத்து விபின் ஒப்பந்தமாகி இருக்கிறார்.