முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஏழை மாணவிக்கு உதவி

தமிழில் "ஆடுகளம்', "ஆரம்பம்', "காஞ்சனா–2', "கேம் ஓவர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:


தமிழில் "ஆடுகளம்', "ஆரம்பம்', "காஞ்சனா–2', "கேம் ஓவர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் நடிகை டாப்சி, ஆன்லைன் வகுப்புக்காக போன் இல்லாமல் தவித்த ஏழை மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், 12-ஆம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்விற்குப் படிக்கத் தயாராகி வருகிறார். அதற்கான கல்விக் கட்டணத்தை அவரது தந்தை கடன் வாங்கியும், நகைகளையும் விற்றும் கட்டியுள்ளார்.

இருப்பினும் அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க தேவையான ஸ்மார்ட்போன் இல்லை என்று செய்திகள் வெளியானது. இதைப் பார்த்த நடிகை டாப்சி அந்த மாணவிக்குப் புதிய ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் டாப்சி.
 

முழு கட்டுரையைப் படிக்க →