முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விஜய் வழியில் ரசிகர்கள்! 

கரோனா பொது முடக்க நேரத்தில் பல சினிமா பிரபலங்கள்  "கிரீன் இந்தியா' சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


கரோனா பொது முடக்க நேரத்தில் பல சினிமா பிரபலங்கள்  "கிரீன் இந்தியா' சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, சில தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சவாலில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை  தன் சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்தார் .மேலும் இந்த சவாலை நடிகர் விஜய் , ஜூனியர் என். டி. ஆர், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். விஜய்  அவரது வீட்டுத் தோட்டத்தில் செடி நட்டு அந்த புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.

அதில் "மகேஷ் பாபு இது உங்களுக்காக. பசுமையான இந்தியா உருவாக்குவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'  என ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மகேஷ் பாபு " சவாலை ஏற்று செய்ததற்கு மிகவும்  நன்றி விஜய் ப்ரோ ! பத்திரமாக இருங்கள்'  என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதனை விஜய் மக்கள் இயக்கம் வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →