த்ரில்லர் கதை மன்னன்
"தொந்தரவு செய்யாமல் இருக்க தாயார்தான் மகனுக்கு, ஏதாவது எழுது என, கோடுபோட்ட நோட்டில் ஒன்றைக் கொடுக்க..
"தொந்தரவு செய்யாமல் இருக்க தாயார்தான் மகனுக்கு, ஏதாவது எழுது என, கோடுபோட்ட நோட்டில் ஒன்றைக் கொடுக்க.. அப்போது எழுத ஆரம்பித்தேன். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் த்ரில்லர் கதை மன்னன் சட்டம்படித்து கடைசியில் எழுத்தை தேர்ந்தெடுத்தவர்.
பெரியவர்களுக்கு 45 நாவல்களும் சிறுவர்களுக்கு 7 சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவற்றில் சில சினிமாக்களாகவும்.. தொலைக்காட்சி தொடர்களாகவும் வந்து கலக்கியதும் உண்டு.
மொத்தத்தில் இதுவரை இவருடைய புத்தகங்கள் 150 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளன.
அது மட்டுமல்ல 45 மொழிகளில் 78 நாடுகளில் வெளியாகியுள்ளன.
இவரும் , இவரது மனைவியும் இணைந்து, "wishing you well foundation' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். படிப்பு அறிவு குறைபாடு உள்ளவர்கள் படிக்கத் தூண்டும் விதமாக மெதுவாக படித்து பலன்பெற 1 மில்லியன் புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.