ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் படம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. "மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
""இப்போதைக்கு இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன். மற்ற விஷயங்களைத் தயாரிப்பு தரப்பு தான் சொல்ல வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன்'' இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.