முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஊரை விட்டு வெளியேறியவரின் வெற்றிக்கதை

​டொனால்டு டிரம்ப் கொடுத்த கடுமையான போட்டியைச் சமாளித்து அமெரிக்காவின் புதிய அதிபராகி இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் மிக எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்.

Updated On : 13 டிசம்பர், 2020 at 6:00 AM
பகிர்:


டொனால்டு டிரம்ப் கொடுத்த கடுமையான போட்டியைச் சமாளித்து அமெரிக்காவின் புதிய அதிபராகி இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் மிக எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ரஸ்ட் பெல்ட் எனும் சிறிய நகரத்தில் 20.11.1942-இல் பிறந்தவர்.ஜோசப் ராபினெட் பிடன்.

பெற்றோர் சூட்டிய இந்த பெயரை ஜோபிடன் என தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு மாற்றிக் கொண்டார். இவர் தந்தை கார் ஷோரூம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணியாற்றியதால் நடுத்தர வர்க்க குடித்தனம் நடத்தியது ஜோபிடனின் குடும்பம். 1960-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜோ பிடனின் தந்தைக்கு வேலை பறி போனது.

சொந்த ஊரில் பிழைப்பு நடத்த இனியும் வழியில்லை என்பதால் ரஸ்ட் பெல்ட் நகரில் இருந்து டெலாவேருக்கு குடி பெயர்ந்தது ஜோபிடனின் குடும்பம். அங்கே வளர்ந்த ஜோபிடன் இளம் பிராயத்திலேயே கருப்பின மக்களின் பாதுகாவலராக தனது செயற்பாடுகளை அமைத்துக் கொண்டார். 

Advertisement

மகனின் அரசியல் ஆசையை ஆமோதித்த ஜோபிடனின் தந்தை அவரை சிராகியூஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க வைத்தார். அதன் பின்னர் இனவெறிக்கு எதிராக ஓங்கி ஒலித்து முழங்கத் தொடங்கிய ஜோபிடனின் குரல் இன்று வரை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து கொண்டிருந்த ஜோபிடனுக்கு 1972-ஆம் ஆண்டு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது. கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சென்றிருந்த ஜோபிடனின் மனைவி நெலியா மற்றும் மகள் நவோமி கார் விபத்தில் பலியாயினர். இரண்டு மகன்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதலில் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில் அது எதிரிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்பது பின்னர் தெரியவந்தது.

முதல் மனைவி இறந்த நிலையில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த ஜோபிடன் 1977-ஆம் ஆண்டு ஆசிரியை ஜில் என்பவரை காதல் திருமணம் புரிந்து கொண்டார். ஜோபிடனுக்கும் ஜில் ஜாக்கப்புக்கும் 1981-ஆம் ஆண்டு ஆஷ்லி என்னும் பெண் குழந்தை பிறந்தது. அரசியல் வாரிசாக ஜோபிடன் வளர்த்து வந்த மூத்த மகன் பியூ மூளை புற்று நோயால் 2015-இல் மறைந்தார். கடற்படையில் பணியாற்றிய ஜோபிடனின் இன்னொரு மகனான ஹண்டர் போதைக்கு அடிமையாகி வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்க அதிபராக வர வேண்டுமென்பது  ஜோபிடனின் 33 ஆண்டு கால கனவு. 1987-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவினார். ஒபாமா அதிபராக இருந்த போது 8 ஆண்டு காலம் துணை அதிபராக இருந்தார். ஜோபிடன் 1972-ஆம் ஆண்டு தனது 29-ஆவது வயதில் அதாவது மிக இளம் வயதில் டெலாவேர் மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

எவ்வளவு காலம் ஆனாலும் கனவைத் துரத்திக் கொண்டே பயணப்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு புதிய அமெரிக்க அதிபர் ஜோபிடன் சிறந்த உதாரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.