இவர்கள் ராசி இப்படி
ஸ்ரீதர் கே.பாலசந்தர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், வி.சீனிவாசன், ராமண்ணா போன்ற இயக்குநர்களுக்குள் ஒற்றுமை உண்டு. கலைத் துறையில் இவர்களது முதல் முயற்சி வெற்றியையும் அடுத்தது தோல்வியையும் தந்திருக்கிறது.
ஸ்ரீதர் கே.பாலசந்தர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், வி.சீனிவாசன், ராமண்ணா போன்ற இயக்குநர்களுக்குள் ஒற்றுமை உண்டு. கலைத் துறையில் இவர்களது முதல் முயற்சி வெற்றியையும் அடுத்தது தோல்வியையும் தந்திருக்கிறது.
ஸ்ரீதர் இயக்கிய முதல் படம் "கல்யாண பரிசு'. இது வெள்ளி விழா கொண்டாடியது. அவரது அடுத்தப் படம் "மீண்ட சொர்க்கம்'. அது தோல்விப் படமாக அமைந்துவிட்டது.
கே.பாலசந்தர் முதன் முதலாக இயக்கிய படம்" நீர்க்குமிழி' இந்தப் படம் வெற்றி பெற்றது. அடுத்து அவரது இயக்கத்தில் வெளி வந்த படம் "நாணல்' தோல்வி கண்டது.
Advertisement
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் முதலில் இயக்கிய "சாரதா' பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அவரது இரண்டாவது படமாக "தெய்வத்தின் தெய்வம்' படு தோல்வி அடைந்தது.
முக்தா வி-சீனிவாசன் இயக்கத்தில் முதலில் வெளி வந்த "முதலாளி' வெற்றி பெற்றது. அடுத்த படமான" பாஞ்சாலி' தோல்வியுற்றது.
ராமண்ணா முதலில் இயக்கிய படம் "வாழப் பிறந்தவள்" வெற்றி அடைந்தது. அவரது அடுத்த படமான "கூண்டுக்கிளி' தோல்வி கண்டது.