ஞாயிறு கொண்டாட்டம்

மனித பரிணாமம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள குகையில் நடந்த புதை வடிவ ஆய்வில் "லிட்டில் ஃபுட்' என்ற எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

ஆ. கோ​லப்​பன்

தென்னாப்பிரிக்காவில் உள்ள குகையில் நடந்த புதை வடிவ ஆய்வில் "லிட்டில் ஃபுட்' என்ற எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது மனித குடும்பத்தைச் சேர்ந்த 3.67 மில்லியன் ஆண்டுகள் பழமையான பெண்ணின் எலும்புக்கூடு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எலும்புக்கூடு மனித பரிணாமம் குறித்த ரகசியங்களை அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.

3.67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனைப் போன்ற நிமிர்ந்து நடக்கும் அடையாளங்களைக்  கொண்ட இந்த எலும்புக்கூடு நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. அந்தப் பெண் ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்தவள். தற்போதைய மனிதர்களின் முன்னோர்களாக கருதப்படும் ஹோமோ செபியன்களுக்கு முந்தைய இனத்தைச் சேர்ந்தவர். அவர் "ஆஸ்ட்ராலோபிதேகஸ்' என்ற ஒரு வகை. குரங்கு போன்ற "ஹோமினிட்' இனத்தைச் சேர்ந்தவர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த "ஹோமினிட் ஆஸ்ட்ராலோபிதேகஸ் ஆப்பிரிக்கானஸ்' என்று அழைக்கப்படுகிறது.  

நவீன மனிதர்களின் அட்லெஸ் முதுகெலும்பு தலைக்கும் கழுத்துக்கும் இடையேயான தொடர்பாக உள்ளது. இது தமனிகள் வழியாக மூளைக்கு ரத்தம் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. லிட்டில்ஃபுட் இன் அட்லஸ் முதுகெலும்பை ஆய்வு செய்த போது தற்கால மனிதர்களிலிருந்து ஆதிமனிதன் எவ்வாறு வித்தியாசமாக இருந்தான் என அறிய முடிகிறது.

அதன்படி லிட்டில்ஃபுட் இன் அட்லஸ் முதுகெலும்பு வழியாக மூளைக்குச் சென்ற ரத்த ஓட்டம் நவீன மனிதர்களை விட மூன்று மடங்கு குறைவாக இருந்து உள்ளது. இது போல் லிட்டல்ஃபுட் மண்டை ஒட்டை ஆய்வு செய்த போது அந்தக் கால மனிதர்களுக்குச் சிறிய மூளை இருந்ததும் குரங்குகள் போன்ற மரங்களுக்கு இடையில் தாவுவது மற்றும் சைவ உணவுகளைச் சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல்: சாத்தான்குளம் சேகரத்தில் இருவா் போட்டியின்றி தோ்வு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

ரீத்தாபுரத்தில் இன்று மின்தடை

சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்

ஆதிசங்கர நாராயண பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT