எஸ்.எம் கிருஷ்ணா சமீபத்தில் தனது அரசியல் வாழ்க்கைப் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார். அதில் ஒன்று கன்னடத்தில் Smriti Vahini என்ற பெயரில் வெளியானது.
எஸ்.எம்.கிருஷ்ணா முதல் அமைச்சராக இருந்த போது தான் பெங்களூரு ஐ.டி நகரமானது. ஏராளமான நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இதனால் அவரை Bangalaore CEO என்று செல்லமாக அழைப்பர்.
புத்தகத்தில் அவர் எழுதிய ஒரு சம்பவம் இது:
என்னுடைய உறவுக்காரருடன் நின்றிருந்தேன். நான் சிறு பையன். அப்போது காந்தி பெங்களூரிலிருந்து மைசூர் பயணம் செய்து நிதி வசூல் செய்து கொண்டிருந்தார்.
அவர் அருகில் வந்த போது என் கையில் வைத்திருந்த காசை உண்டியலில் போட சொன்னார் என் உறவினர்.
நான் காசுகளைப் போட எத்தனித்த போது. காந்தி ""அது வேண்டாம். உன் காது கடுக்கன்களைக் கழட்டிக்கொடு'' என்றார். நானும் உடனே அவற்றைக் கழட்டிக் கொடுத்தேன் என்று அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார் கிருஷ்ணா.
ஜான். எப். கென்னடி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது, அவர் அனுமதியுடன் இந்தியர்கள் வசிக்கும் இடங்களில் கென்னடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தேன். கென்னடி வெற்றிப் பெற்றதும், என்னைக் கூப்பிட்டு நன்றி தெரிவித்தார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.