ஞாயிறு கொண்டாட்டம்

எதிலிருந்து வந்தது கரோனா வைரஸ்?

இன்று கரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் எதிலிருந்து வந்தது என்று புதுவிளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவர் ரகுபதி.

வனராஜன்


இன்று கரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் எதிலிருந்து வந்தது என்று புதுவிளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவர் ரகுபதி.

விலங்குகள் காட்டிலும், மனிதன் வீட்டிலும் இருந்துவிட்டால்  உலகத்தில் பிரச்னையில்லை.  ஆதிகால மனிதர்கள் மிருகங்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ள ஆரம்பித்தார்கள். அப்போதிலிருந்து இந்த வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவ ஆரம்பித்துவிட்டது. ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு இருந்ததா என்பது தெரியவில்லை. அவர்கள் இது போன்ற வைரஸ் தொற்றினால் கூட இறந்து இருக்கலாம். 

ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் மனிதர்களே மனிதர்களை கொன்று சாப்பிடுகிறார்கள்.  இதன் காரணமாகத்தான் வைரஸ்கள் நரம்பு மண்டலம் வழியாக உடலில் பரவியது.  கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக டெங்கு, சிக்கன்கூனியா, ஸ்வைன் ஃப்ளூ போன்ற நோய்கள் வந்தன. அப்போது இந்த நோயை விரட்ட கஷ்டப்பட்டோம். ஆனால் பயப்படவில்லை. ஆனால் இப்போது கரோனா போன்ற வைரஸ் நம்மை பயமுறுத்துகிறது. 

கரோனா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் ஒரு நோய். இந்த நோய் படிப்படியாக தற்போது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.  இதுவரை 7 வகையான கரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் "சார்ஸ்' வகை கரோனா பூனையில் இருந்தும், "மெர்ஸ்' வகை கரோனா ஒட்டகத்தில் இருந்தும் மனிதனுக்கு பரவியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நாவல் கரோனா வைரஸ் எந்த மிருகத்தில் இருந்து பரவியது.

பொதுவாக நம்முடைய உடலில் நோய் கிருமி நுழையும் போது அதை எதிர்க்க முடியாது. மாறாக அதை வெளியேற்ற போராடும். இந்த போராட்டத்தில் வைரஸ் ஜெயித்துவிட்டால் நாம் உயிருடன் இருக்கமாட்டோம். மனிதர்கள் நாம் தான் அறிவாளி என்று நினைக்கிறோம். உலகத்தில் தான் உயிர் வாழ்வதற்கு தன்னை மாற்றிக்கொள்ளும் சக்தி இந்த வைரஸ்களுக்கு உள்ளது. விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவ ஆரம்பித்தது. இதனை எதிர்ப்பதற்கு அணுக்களை உருவாக்க போதிய நேரம் இல்லை. அதனால் இதனை பரவாமல் தடுக்க வேண்டும்.

பரவினால் அதனுடைய ஆபத்து மிகவும் மோசமாக இருக்கும்.  இதற்கு நாம் செய்ய வேண்டியது நாம் யாரையும் நெருங்கவும் கூடாது. நம்மை யாரும் நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்றை சமாளிக்க சிறிது காலம் நாம் வீட்டை முடங்கி கிடக்க வேண்டியுள்ளது. இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். பரவாயில்லை சமாளிப்போம். 

இதனுடைய அறிகுறிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. குறிப்பாக ஒரு சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படும். சிலருக்கு காய்ச்சலில் தொடங்கும். அதற்காக தும்மல் போடுபவர்களும் இருமல் ஏற்படுபவர்களுக்கும் கரோனா வந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். அவை சாதாரணமானதாக கூட இருக்கலாம். 

எது எப்படியோ உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ளுங்கள். இது மிகவும் இறுக்கமான காலகட்டம். தயவு செய்து உடல் நலம் சரியில்லை என்றால் ஒரே மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள்.  சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். வீட்டில் சமைப்பதை உண்ணுங்கள். உங்கள் உடம்பை காப்பாற்றிக் கொள்ளுங்கள். உலகத்தைக் காப்பாற்றுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT