ஞாயிறு கொண்டாட்டம்

மலராத மனங்கள்

"காமராசு', "அய்யாவழி', "நதிகள் நனைவதில்லை' படங்களின் மூலம் பரவலான வரவேற்பை பெற்றவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன்.

DIN


"காமராசு', "அய்யாவழி', "நதிகள் நனைவதில்லை' படங்களின் மூலம் பரவலான வரவேற்பை பெற்றவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன்.

இவரின் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படம் "மலராத மனங்கள்.' வைகுண்டா சினி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, எழுதி, இயக்குகிறார். ரோஷன், காவ்யா, ஹர்ஷவர்த்தின், நிஷா, ரவிமரியா, சிங்கமுத்து, மதுரை முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் கதைக் கரு குறித்து இயக்குநர் பேசும் போது.... "" ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும்தான் போய் முடியும். பிரசவம் பார்க்க அதிக வசதி இருக்கிற மருத்துவமனையில் சேர்க்கலாம். ஆனால், தாய் அனுபவிக்கிற அந்த வலிக்கு நிகரில்லை.

இருப்பதிலேயே சிறந்த உணவை வாங்கி விடலாம். ஆனால், பசி என்ன விலை கொடுத்தால் வரும். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன்வைக்கிற இடம் அது. மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம் என்று உணர்கிற இடங்கள் ஆங்காங்கே வரும். அதுதான் இந்தக் கதையின் பலம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT