தாத்தா வழியில் பேரன்...!
குத்துச் சண்டை போட்டிகளில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த முகமது அலியைத் தொடர்ந்து அவரது மகளான லைலா குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொண்டார்.
குத்துச் சண்டை போட்டிகளில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த முகமது அலியைத் தொடர்ந்து அவரது மகளான லைலா குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் தந்தை போல் புகழ் பெற முடியவில்லை.
முகமது அலி மரணமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அலியின் பேரன் நிக்கோ அலி வால்ஷ் குத்துச் சண்டை மேடை எறியதுடன் வெற்றியும் பெற்றுள்ளார்.
22 வயதாகும் நிக்கோ அலி தொழில் முறையாக இல்லாமல் குத்துச் சண்டை போட்டிகளில் 14 வயது முதலே கலந்து கொண்டு வந்தார். சென்ற வாரம், அமெரிக்காவில் ஓக்லஹோமாவில் நடந்த குத்துச் சண்டையில் தொழில் ரீதியான குத்துச் சண்டை வீரராக நிக்கோ கலந்து கொண்டு எதிராளியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த குத்துச் சண்டையையை ஏற்பாடு செய்தவர், முகம்மது வழியில் குத்துச் சண்டைகளை ஏற்பாடுகள் செய்து வந்த பாபி அறும். "தாத்தா போல் பெயர் வாங்க கட்டாயம் முயற்சிப்பேன்..' என்கிறார் நிக்கோ அலி.
Advertisement