மலிவான விலையில் சொகுசு கார்கள்
மத்திய கிழக்கு நாடுகள் சொகுசு கார்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. உலகின் மிக உயர்ந்த கார்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக அங்கு உலவுவது வழக்கம்.
மத்திய கிழக்கு நாடுகள் சொகுசு கார்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. உலகின் மிக உயர்ந்த கார்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக அங்கு உலவுவது வழக்கம். சொகுசுக் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களே கூட மத்திய கிழக்கு சந்தையின் வாடிக்கையாளர் தேவையை மையமிட்டே கார்கள் தயாரிப்பது வழக்கம்.
சாதாரண கார்களை விட சொகுசுக் கார்களின் எண்ணிக்கை தான் இங்கு அதிகம். குறிப்பாக துபையில் திரும்பிய திசையில் எல்லாம் சொகுசுக் கார்கள்தான். பெருகும் சொகுசுக் கார்களால் சமீபமாய் துபை அரசுக்கு ஒரு புதிய தலைவலி உருவாகியிருக்கிறது. இந்த கார்கள் ஆங்காங்கே அப்படியே கைவிடப்பட்டு செல்லப்படுவது தான்.
துபையின் விமான நிலைய பார்க்கிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அப்படியே கைவிடப்படுகின்றன. பென்ஸ், பிஎம்.டபிள்யூ, போர்சே பெராரி, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற அதி சொகுசு கார்கள் கூட கைவிடப்படுகின்றன. ஆண்டுதோறும் மூவாயிரம் கார்கள் கைவிடப்படுகின்றன.
Advertisement
இதற்கான காரணம் துபையின் சட்டங்கள். அங்கு சொகுசுக் கார்களை எளிதாக கடனுக்கு வாங்கலாம். ஆனால் கடனை கட்ட இயலாவிடில் சட்டப்படி சிறைதண்டனை கிடைக்கும். மற்ற நாடுகள் போல் நீதிமன்றம், வழக்கு என்று இழுத்தடித்துக் கொண்டிருக்க இயலாது.
இதனால் துபையில் சுற்றி திரியும் வெளிநாட்டுகாரர்கள் ஒரு கட்டத்தில் விமான நிலையங்களிலோ பொது இடங்களிலோ கார்களை நிறுத்திவிட்டு ஓடிவிடுகிறார்கள். இப்படி நிறுத்தப்படும் கார்களை போலீசார் கைப்பற்றி ஏலம் விடுகிறார்கள். இதனால் தான் துபையில் சொகுசுக் கார்கள் கூட குறைவான விலையில் கிடைக்கிறது. ஆனால் இந்த கார்களை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாது. ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி அதிகம் என்பதால் அங்கேயே இருப்பவர்களால் மட்டும் வாங்க இயலும்.