ஞாயிறு கொண்டாட்டம்

ராயர் பரம்பரை

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ராயர் பரம்பரை.'  சின்னசாமி மௌனகுரு தயாரித்து வரும் இப்படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.

DIN


சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ராயர் பரம்பரை.' சின்னசாமி மௌனகுரு தயாரித்து வரும் இப்படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற "மரடோனா', "டூ ஸ்டேட்ஸ்' படங்களில் நடித்த சரண்யா நாயர் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

அனுசுலா, கிருத்திகா, கே.ஆர். விஜயா, ஆனந்தராஜ், ஷாலு ஷம்மு, "நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, சீனிவாசன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்நாத். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""அன்பும், உறவும்தான் கதையின் அடிப்படை . கதையை நகர்த்தும் கரு. உறவுகள்தான் மனித வாழ்வின் ஆதாரம் என நினைக்கிறேன். அதை விட்டு வெளியேற நினைக்கிற மனப்பாங்கு இப்போது விரவி கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. அது போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் இந்தப் படம். பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT