ஞாயிறு கொண்டாட்டம்

இளம் வயது இயக்குநர்

12  வயதில்  திரைப்பட இயக்குநர்  ஆக முடியுமா ? "முடியும்' என்கிறார்  ஆஷிக் ஜினு. 

அங்கவை


12 வயதில் திரைப்பட இயக்குநர் ஆக முடியுமா ? "முடியும்' என்கிறார் ஆஷிக் ஜினு.

12 வயதாகும் ஆஷிக் பல குறும்படங்களையும், முழு நீள திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது செய்தி அல்ல. ஆஷிக் இயக்கியிருக்கும் படங்களுக்கு விருதுகள், பாராட்டுக்கள் கிடைத்திருப்பதுதான் முக்கியச் செய்தி.

ஆறு குறும்படங்கள், ஒரு செய்திப் படம், இரண்டு கமர்ஷியல் படங்கள் ஆஷிக்கின் முத்திரையில் வெளி வந்துள்ளன.

பத்தாம் வயதில் முதல் குறும்படமான "பிடிகா' கேரளத்தில் நுகர்வோர் விழிப்புணர்வைப் பரப்பும் படம் என்ற பாராட்டைப் பெற்றது.

"த கொலம்பியன் அகாதெமி' என்ற முழு நீள திரைப்படத்தை இயக்கிய ஆஷிக், போதை மருந்து அபாயம் குறித்து "ஈ வி ஏ' என்ற படத்தையும் தமிழில் இயக்கி வெளியிட உள்ளார். "ஈ வி ஏ' படத்தை கலைச்செல்வி என்பவர் தயாரித்துள்ளார்.

சென்ற ஆண்டு கரோனா பொது முடக்கக் காலத்தில் செடி கொடிகள் மட்டும் அசைந்த நிலையில், "த ரூல்ஸ் ஆஃப் பீஸ்' குறும்படத்தையும் தயாரித்தார். இந்தப் படத்திற்கு கேரள மாநில அரசின் விருதும் கிடைத்தது.

ஆஷிக்கின் அப்பா ஜினு சேவியர் திரைக்கதை எழுதுபவர். திரைப்பட தயாரிப்பாளர். ஆஷிக்கின் படங்களுக்கும் அப்பா சேவியர்தான் தயாரிப்பாளர். ஆஷிக் கொச்சியில் வசிக்கிறார். ஆஷிக்கின் கனவு ""தல அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும்'' என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

SCROLL FOR NEXT