ஞாயிறு கொண்டாட்டம்

வியக்க வைக்கும் மாட்டுவண்டி

மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம். வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி. 

குமார்


மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம். வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி. 

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.

உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

இப்படி யோசித்த நமது மரபு-மரதச்சர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி'  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5 அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  

நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 5 அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் தீ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு' என்று சொல்வோமே அதில் தீ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும். இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் "போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5 அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கியாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1 அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் செய்ய முடியும்.

இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT