முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நாதஸ்வர வித்வானுக்கு மரியாதை

காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வர இசையில் "சிங்கார வேலனே தேவா' என்ற பாடல் "கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம் பெற்றுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வர இசையில் "சிங்கார வேலனே தேவா' என்ற பாடல் "கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம் பெற்றுள்ளது. இன்று வரை பட்டி தொட்டியெல்லாம் அந்த பாடல் பிரபலம். அத்தகைய புகழ்பெற்ற நாதஸ்வர இசைமேதைக்கு ஒரு சமயம் ஜனாதிபதி மாளிகையில் நாதஸ்வரம் இசைக்க வாய்ப்பு கிடைத்தது. 

அங்கு நாதஸ்வரம் வாசிக்க அருணாசலம் சென்றார். தில்லி விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு காரில் வந்தார். அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரை வரவேற்பதற்காக வாயிலில் நின்றதுடன், கார் வந்ததும் தானே முன் வந்து கார் கதவை திறந்தார். 

இதனை கண்டதும் அருணாசலம் ஒரு நிமிடம் ஆடி போய் "என்னங்க இது. நாட்டின் முதல் குடிமகன் இது மாதிரி செய்யலாமா?' என்று பதறினார். இதனை கண்ட ஜனாதிபதி" ஏன் பதறுகிறீர்கள்? காருகுறிச்சி அருணாசலம் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் இந்த ராதாகிருஷ்ணன் நாதஸ்வர மேதையாக முடியாது' என்று கூறி வித்வானுக்கு பாராட்டு தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →