அரிய படைப்பு
ஒரு வைரத்துக்குள் இன்னொரு வைரம் இருக்கும் அதிசயத்தை பார்க்க முடியுமா?
ஒரு வைரத்துக்குள் இன்னொரு வைரம் இருக்கும் அதிசயத்தை பார்க்க முடியுமா?
ஆமாம் பார்க்க முடியும். எங்கே தெரியுமா?
அந்த அரியவகை வைரக்கல் ரஷ்ய நாட்டின் சுரங்கத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சைபிரியாவில் அரசுச் சுரங்க நிறுவனம் இந்த அரிய வகை வைரத்தைக் கண்டறிந்துள்ளது.
இந்த அரிய வகை வைரக்கல், 80 கோடி ஆண்டுகளுக்கு பழைமையானது என்று கணிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள வைரத்தின் வெளிப்புறம், 0.62 காரட் எடையும், உள்ளே இருக்கும் சிறிய வைரம் 0.02 காரட் எடையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எங்களுக்குத் தெரிந்த வரையில் இதைப் போன்ற ஒரு வைரத்தை உலகில் எங்குமே இதுவரை கண்டுபிடித்தது இல்லை. இது இயற்கையின் மிக அரிய படைப்புதான்' என்று சுரங்கத் தரப்பு வியந்து கருத்து தெரிவித்துள்ளது.
இந்த வைரத்தைப் பொறுத்தவரை, உள்ளே இருக்கும் சிறியது முதலில் உருவாகியிருக்கும் என்றும், அதன் பிறகுதான் வெளியே இருக்கும் பெரிய வைரக்கல் வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் இரு வைரத்துக்கும் இடையில் ஒரு சிறிய வெற்றிடம் உள்ளது. அது எப்படி உருவானது என்பதுதான் தற்போது விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. அது குறித்து அடுத்தடுத்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.