முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கண்ணைக் கவரும் ப்ளேட் தீவு

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸில் இருந்து வடக்கு பக்கத்தில் கரையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ப்ளேட் தீவு, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவருகிறது.

Updated On : 28 ஆகஸ்ட், 2022 at 6:00 AM
பகிர்:

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸில் இருந்து வடக்கு பக்கத்தில் கரையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ப்ளேட் தீவு, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவருகிறது. இதை போப்யாப், இலி ப்ளேட்டு தீவு என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.

மொரீஷியஸ் சுமார் 100-க்கும் அதிகமான தீவுகளைக் கொண்டது. இதில் ஒன்றுதான் ப்ளேட் தீவு. ஆனால், பாதுகாக்கப்பட்ட யுனெஸ்கோ தொல்பொருள் சார்ந்த பகுதி. கடல் மட்டம் உயர்ந்தால், தீவும் மூழ்கிவிடும்.

253 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில்,  யாரும் வசிக்கவில்லை. இரவும் தங்க அனுமதியில்லை. வேறு எந்தப் பகுதியிலும் காண இயலாத தாவரங்கள், மிருகங்களை இங்கு காணலாம்.

Advertisement

1830-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை ஆங்கிலேயர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்று, கரும்புத் தோட்டங்களில் குறைந்த ஊதியத்தை அளித்து வேலை வாங்கினர். இவர்களை அழைத்துவரும்போது, காலரா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் இருந்தால், குணப்படுத்தி அனுப்ப ஏதுவாக இது குவாரன்டைன் தீவாக இருந்தது.

இதனால் இங்கு மருத்துவர்கள், உதவியாளர்கள், மருத்துவமனைகள், அவர்களுக்கான வீடுகள், வந்தவர்கள் தங்க டார்மெட்டரிகள் என எல்லாம் இருந்தன. இப்படியொரு கட்டத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. 1855-இல் கட்டப்பட்ட லைட் ஹவுஸ் இன்றும் உள்ளது.

இங்கு வசித்த மீனவர்களுக்கு என தனிக் கோயில் உள்ளது. அது 1946-இல் ஏற்பட்ட சுனாமியில் நாசமாகியது.

இந்தத் தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல கட்டுமரம், மின்படகு, சொகுசு படகு போன்றவை உள்ளன.  மாலை வரை ரசித்துவிட்டு, அங்குள்ள கட்டடங்களில் ஓய்வெடுத்துவிட்டு இரவே திரும்பிவிட வேண்டும்.

விலங்குகளும், பறவைகளும்...:

பூரான்களின் பூமியாக முன்பு இருந்தது. இப்போது அவை வேட்டையாடப்பட்டதால், அரிதாகிவிட்டது.

இந்தியர்களுக்கு அடுத்து சீனர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும் இங்கு அழைத்துவரப்பட்டனர். இன்று இவர்கள் இணைந்து வாழும் நாடுதான் மொரீஷியஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.